ETV Bharat / state

"குடிச்சிட்டு வண்டிய தள்ளிட்டு வந்தா ஃபைன் போடனும்னு ரூல்ஸ் இருக்கா..?" போலீசாருடன் மல்லுகட்டிய இளம்பெண் வீடியோ! - chennai women viral video

வாகன சோதனையின் போது மதுபோதையில் பிடிபட்ட நபர்களை விடுவிக்குமாறு கேட்டு காவலரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

chennai
போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண்
author img

By

Published : Apr 18, 2023, 1:05 PM IST

"குடிச்சிட்டு வண்டிய தள்ளிட்டு வந்தா ஃபைன் போடனும்னு உங்க ரூல்ஸ்ல இருக்கா": போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண்

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைதுரை (25) என்பவர் சூளைமேடு சட்ட ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு உதவி ஆய்வாளர் லோகிதக்சன் தலைமையிலான போலீசாருடன் சூளைமேடு நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களைப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் மது போதையிலிருந்தது தெரியவந்துள்ளது. உடனே காவலர் வெள்ளைதுரை அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டி ஆவணங்களைக் கேட்டுள்ளார். ஆனால் உடனே அந்த நபர் செல்போனில் ஒருவரைத் தொடர்பு கொண்டு போலீசார் தங்களைப் பிடித்து விட்டதாகவும், உடனே சம்பவயிடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த பெண் ஒருவர் காவலர் வெள்ளைதுரையிடம் சென்று பிடிபட்ட நபர்களை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அதற்குக் காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆகையால் அந்த பெண், "குடித்துவிட்டு வண்டியை ஓட்டத் தான் கூடாது, குடித்துவிட்டு வண்டியை தள்ளிக்கொண்டு வந்தா பைன் போடனும்னு உங்க ரூல்ஸ் புக்குல இருக்கா காட்டுங்க" என கூறியுள்ளார்.

மேலும் அந்த காவலரைப் பார்த்து "நீங்க பிராடு, போலீஸ்காரங்க எல்லாருமே பிராடு தான்" எனவும், உதவி ஆய்வாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் அந்த பெண் திடீரென கீழே கிடந்த பொருட்களை எடுத்து வீசி, கையால் காவலர் வெள்ளைதுரையைத் தாக்கியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணிடம் காவலர் எஸ்பி ஆஃபிஸ்ல வந்து பாருங்கள் எனக் கூறியதற்கு, யார எம்எல்ஏ-வ கூப்பிட்டு வரனுமா! இல்ல எம்பி-ய கூப்பிட்டு வரனுமா என கூறியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சக காவலர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்திய போது, மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்த நபர்கள் சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் வினோத்குமார் என்பதும், போலீசாரை தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் சத்யராஜின் மனைவி அக்‌ஷயா என்பதும் தெரியவந்துள்ளது.

பின்னர் மதுபோதையில் ஓட்டி வந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த சூளைமேடு போலீசார், காயமடைந்த காவலர் வெள்ளைதுரை அளித்த புகாரின் பேரில் பெண் அக்‌ஷயா, சத்யராஜ் மற்றும் வினோத்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். தற்போது காவல்துறையினர் அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: Karnataka Election: ஹிமாச்சல் பாணியில் ஆட்சியை இழக்கும் அபாயம்.. கர்நாடாக பாஜகவில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.