சென்னை திருவொற்றியூர் குப்பத்தில் 3 டன் எடையுள்ள திமிங்கலம் ஒன்று நேற்றிரவு (ஜன.29) உயிருடன் கரை ஒதுங்கியது. உடனே அந்த திமிங்கலத்தை மீனவர்கள் கடலில் விட்டனர்.
இந்நிலையில் இன்று (ஜன.30) திருவொற்றியூர் குப்பம் பகுதியில் அதே திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனையடுத்து மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் உயிரிழந்த திமிங்கலத்தை கிரேன் இயந்திரம் மூலம் லாரியில் ஏற்றிச் சென்றனர்.
இதனிடையே திமிங்கலம் குப்பை கிடங்கில் புதைக்கப்படும் எனவும் தொழிற்சாலையின் ரசாயனக் கழிவுகளால் சுவாசிக்க முடியாமல் இறந்திருக்கலாம் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சீர்காழி அருகே கரை ஒதுங்கிய 4 டன் எடை கொண்ட திமிங்கலம்