சென்னை: அடுத்து சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை நெருப்பு மேடு பகுதியைச்சேர்ந்தவர், உமர் பாஷா(19). இவர் லேத் பட்டறையில் பணியாற்றி வந்தார். இவர் மீது செல்போன் வழிப்பறி வழக்கு ஒன்று சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி உமர் பாஷாவின் நண்பரான சந்தோஷ்(20) என்பவர், இறந்ததையொட்டி சைதாப்பேட்டை செட்டி தோட்டத்தில் அதற்கான காரியம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நடந்த கானா நிகழ்ச்சியின்போது, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் தரப்புக்கும், உமர் பாஷாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தினேஷ் தரப்பினர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உமர் பாஷாவின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த உமரை அருகிலிருந்த நபர்கள் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உமர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:அழகுகலை நிபுணர் போட்டோவை மார்ப்பிங்.. இன்ஸ்டா பெண்கள் உஷார்.. இளைஞர் சிக்கியது எப்படி?