ETV Bharat / state

கோயிலில் ஆபாசப்படம் பார்த்த இளைஞர் தப்பியோட்டம்; போலீஸ் வலைவீச்சு - மத உணர்வை புண்படுத்துதல்

கோயிலில் ஆபாசப்படம் பார்த்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கோயிலில் ஆபாசப்படம் பார்த்த இளைஞர் தப்பியோட்டம்; போலீஸ் வலைவீச்சு

author img

By

Published : Sep 21, 2022, 4:48 PM IST

Updated : Sep 21, 2022, 5:28 PM IST

சென்னை: திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு வந்த அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கோயிலில் அமர்ந்து, தனது செல்போனில் ஆபாசப்படம் பார்த்துள்ளார். இளைஞரின் இந்த செயல் கோயிலில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது. பின்னர், ஆபாசப்படத்தை பார்த்ததை அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் கோயில் தரப்பினர் உறுதிசெய்தனர்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் குருக்கள் உடனே வெளியே ஓடி வந்து பார்ப்பதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச்சென்றார். கோயில் குருக்கள் பிரசாத், இதுகுறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப்புகாரின் பேரில் போலீசார் கோயிலில் அநாகரிகமாக நடந்துகொண்ட அடையாளம் தெரியாத இளைஞர் மீது மத உணர்வைப் புண்படுத்துதல், ஆபாச செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான அடையாளங்களை வைத்து தப்பி ஓடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ஆபாச செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து முன்னணி மத்திய சென்னை மாநகரச்செயலாளர் தங்கராஜ் தலைமையில் பார்த்தசாரதி கோயிலில் புகார் அளித்துச்சென்றனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகள் நாளை விசாரணை

Last Updated : Sep 21, 2022, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.