ETV Bharat / state

போக்குவரத்து காவலர் மீது கார் மோதிய விபத்து - விசாரணையில் திடீர் திருப்பம்

சென்னை ராயப்பேட்டையில் குடித்துவிட்டு காரை வேகமாக ஓட்டி போக்குவரத்து காவலர் மீது மோதி விபத்துக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 26, 2023, 9:02 PM IST

சென்னை: கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி மியூசிக் அகாடமி அருகில் அதிகாலையில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் நான்கு சக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டிவந்த ஒருவர் போக்குவரத்து காவலர் ஜெயக்குமார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இது தொடர்பாக சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே காயம் பட்ட போக்குவரத்து காவலர் ஜெயக்குமாரின் பிரீத் அனலைசர் கருவி காணாமல் போனதாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் என்று கொடுக்கப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நுங்கம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் விபத்து ஏற்படுத்திய காரை சோதனை செய்தபோது ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது.

ஆனால், விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த நபர்களிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு முறையாக நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக விபத்து ஏற்படுத்திய காரில் பயணித்த மதன் என்பவர் தஞ்சாவூரில் பிரபல நாடி ஜோதிடரின் மகன் ஆவார்.

இதேபோல் விகாஷ் என்பவர் பிரபல கட்டுமான நிறுவனரின் தம்பி என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் குடிபோதையில் வாகனம் ஓட்டியதை வழக்குப்பதிவு செய்யாமல் தடுப்பதற்கு பண பலத்தை பயன்படுத்தி தப்பித்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு முறையாக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் மியூசிக் அகாடமி அருகில் போக்குவரத்து காவலர் ஜெயக்குமார் மீது மோதி விபத்துக்குள்ளானது அம்பலமானது. எனவே முறையாக நடவடிக்கை எடுக்காத உதவி ஆய்வாளர்கள் முருகன் மற்றும் தாமஸ், காவலர்கள் சௌந்தர்ராஜன், கணேஷ்பாபு ஆகிய நான்கு பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான காவலர் ஜெயக்குமாருக்கு மருத்துவ செலவு எனக்கு கூறி, விபத்து தொடர்பான வழக்கு விசாரிக்கும் போக்குவரத்து காவலர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை விபத்து ஏற்படுத்தியவர்களிடம் வாங்கியதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் துறை ரீதியாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த மகனை தட்டி கேட்ட தந்தை அடித்துக்கொலை.. தாய் உடந்தை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.