ETV Bharat / state

மறைந்த எழுத்தாளர் கி.ரா.விற்கு சிலை அமைக்கப்படும் - மு.க. ஸ்டாலின் - cm

சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மறைந்த எமுத்தாளர் கி.ரா.விற்கு சிலை அமைக்கப்படும் - மு.க. ஸ்டாலின்

author img

By

Published : May 18, 2021, 3:53 PM IST

பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு (மே17) 11 மணியளவில், புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இந்நிலையில் அவரது மறைவிற்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கி.ரா.வின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர். வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

மறைந்த எழுத்தாளர் கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும் அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும் பொது மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா.-விற்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கி.ரா-வுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.