ETV Bharat / state

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கனவுத் திட்டம்.. நாளை நடக்கவிருக்கும் சோதனைகள் குறித்த முழு விவரம்! - Chandrayaan 3

Gaganyaan project: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் (Gaganyaan) எப்படி செயல்படும், மேலும் ககன்யான் சோதனையானது எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறது இச்செய்தித் தொகுப்பு.

ISRO dream project Gaganyaan is set to undergo its first phase test tomorrow
கனவுத் திட்டம் ககன்யான்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 4:18 PM IST

சென்னை: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் நாளை (அக்.21) காலை 7 மணிக்கு விண்ணில் செலுத்தி இஸ்ரோ சோதனை செய்ய உள்ளது. உலக நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளைத் தொடர்ந்து மணிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு, சூரியனை ஆய்வு செய்ய செப்.2 ஆம் தேதி ஆதித்யா-எல்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதன் தொடர்ச்சியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆனது தற்போது விண்ணுக்கும், நிலவுக்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அதி தீவிரம் காட்டி வருகிறது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்துவர இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னர் 3-கட்ட சோதனைகள் நடைபெறும், இந்த 3-கட்ட சோதனையில், நாளை (அக்.21) அன்று முதல் சோதனையானது நடைபெறுகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Gaganyaan project
ககன்யான் சோதனை

ககன்யான் முதல் சோதனை: இந்த ககன்யான் முதல்கட்ட சோதனையானது, நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (Satish Dhawan Space Centre) உள்ள முதல் ஏவுதளத்தில், நாளை (அக்.21) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சோதனையில், மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லவுள்ள மாதிரி விண்கலத்தின் (crew module) செயல்பாடு குறித்தும், பாதுகாப்பாக தரை இறங்குதல் குறித்தும் ஆய்வுகள் நடைபெறும்.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், "விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு திட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா அனைவரும், தீவிரம் காட்டி வருகின்றனர். முதன் முதலில் அமெரிக்காவின் நாசாவானது விண்ணுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. மேலும், நிலவிற்கு மனிதர்களை அனுப்புவது குறித்து இந்தியா தீவிர ஆய்வில் ஈடுப்பட்டு வருகிறது.

Gaganyaan project
ககன்யான் சோதனை

மேலும், 63-ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பட்ட அப்போலோவின் திட்டமானது, மிகப்பெரிய திட்டம். அதற்காக செலவிட்ட தொகையும் அதிகம். தற்போது இந்தியாவும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில், நாளை முதற்கட்ட சோதனையானது நடைபெற்று வருகிறது. மேலும், ககன்யான் திட்டம் அருகில் இருக்கும் விண்வெளிக்கு (Near Space) செல்லும் திட்டம் தான். இந்த திட்டம் வெற்றி பெற்றால். அதைத் தொடர்ந்து நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் போது எளிதாக இருக்கும்" என்றார்.

எப்படி சோதனை நடைபெறும்? மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லவுள்ள மாதிரி விண்கலத்தை டிவி-டி1 ராக்கெட் மூலம் அதவாது, (TV-D1: Test Vehicle-Demonstration-1) என்ற ராக்கெட் மூலம் நாளை காலை 7- மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துப்படுகிறது.

சுமார் தரையில் இருந்து 60 டிகிரி கோணத்தில், விண்ணில் பாயும். பாய்ந்த பிறகு, 63-ஆவது விநாடியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12.7 கி.மீ உயரத்தில் இருந்து, மாதிரி விண்கலத்தை பிரிப்பார்கள். மீண்டும் மாதிரி விண்கமானது, தொடர்ந்து, 30 விநாடிகள் பயணித்து, 91.2-ஆவது விநாடியில், 16.9 கி.மீ உயரத்தை அடைந்த பின், (crew Escape module)-யில் இருந்து, மனிதர்கள் செல்லகூடிய விண்கலம் மட்டும் தனியாக கடலில் வந்து விழும்.

மேலும், சரியாக, 153m/s, ஒரு நொடிக்கு 153 மீட்டர் வேகத்தில், கீழே தரையிறங்கும். மேலும் 290-ஆவது நொடியில், முழுமையாக பாராசூட்கள் விரியும். உயரத்தையும், கோணத்தையும் சரிசெய்து, பாராசூட்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் 531-ஆவது நொடியில், வங்கக்கடலில் பத்திரமாக இறக்கி சோதனை செய்யப்பட உள்ளது.

வங்காள விரிகுடாவில் விழுந்த உடன் விண்கலத்தை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள். மேலும், (crew Escape module) ஸ்ரீஹரிகோட்டாவி‌ல் இருந்து 14 கி.மீ தொலைவில் விழும்.

Gaganyaan project
ககன்யான் சோதனை

மனிதர்கள் செல்லகூடிய விண்கலம் எப்படி இருக்கும்: உயர்தர அலுமினியத்தால் இது முழுமையாக செய்யபட்டுள்ளது. மேலும், இதன் எடை 4,520 கிலோ கொண்டது. பல அதிநவீன தொழிநுட்பம், அவசர அழைப்பு, கடலில் எந்த இடத்தில் விண்கலம் இருக்கிறது என்கிற லோக்கேஷன் டிரான்ஸ்மீட்டர் மற்றும் 10-பாராசூட்டுகள் கொண்டவை. 17-கி.மீ உயரத்தில் இருந்து கீழே வரும் போது, 8.5 மீட்டர் நொடியில் வந்து தண்ணீரில் தரையிறங்கும் படி வடிவமைக்கபட்டுள்ளது.

பலசோதனை முயற்சிகள்: இந்த முதற்கட்ட சோதனைக்கு முன்பாக பல்வேறு கட்ட சோதனைகள் இஸ்ரோ சார்பில் பல்வேறு இடத்தில் நடைபெற்று உள்ளது. முதலாவதாக, குறைவான உயரத்திலும், பின்னர் நீண்ட உயரத்திலும் நெருப்பில் எப்படி, அந்த மோட்டார்கள் எப்படி தக்க வைத்து கொள்கிறது என்று சோதனை செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மனிதர்கள் செல்லகூடிய விண்கலத்தில் எப்படி பாராசூட் விரிகின்றது, நேரம் மற்றும் வேகத்தை கணக்கிட சோதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இந்திய கப்பற்படைக்கு அந்த விண்கலைத்தை எப்படி கடலிருந்து கொண்டு வர வேண்டும் என பயிற்சி அளிக்கபட்டது. மேலும், கடலில் இந்த விண்கலத்தின் மிதவை முறை எப்படி மிதக்கிறது. உள்ளே உள்ள வீரர்களுக்கு ஆக்ஸிஜன் எப்படி உள்ளது போன்ற சோதனைகளும் நடைபெற்றது.

Gaganyaan project
ககன்யான் சோதனை

டிவி-டி1 ராக்கெட்: ககன்யான் சோதனைக்காகவே இந்த ராக்கெட்டின் முனையில் க்ரூ மாட்யூல் (crew module) மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் (crew Escape System) பொருத்தப்பட்டடுள்ளது. மேலும், இதற்காக மாற்றியமைக்கப்பட்ட விகாஸ் எஞ்சினைப் இஸ்ரோ பயன்படுத்துகிறது.

இதன் பிறகு: டிவி-டி1 ராக்கெட் முதல்கட்ட சோதனைக்குப் பிறகு, தொடா்ந்து 3 முறை ஏவப்பட்டு சோதிக்கப்படும். நாளை மேற்கொள்ளப்படும் டி1 சோதனைக்குப் பின்னா், டி2, டி3, டி4 ராக்கெட் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்து இருந்தார்.

இந்தச் சோதனையில், விண்கலத்தை விண்ணுக்கு ஏந்திச் செல்லும் ராக்கெட், பூமியிலிருந்து 17 கி.மீ. உயரத்தில் விண்கலத்தை விடுவிக்கும். பின்னா் அது பாராசூட் உதவியுடன் வங்காள விரிகுடாவில் விழுந்து பூமிக்குத் திரும்பும். பின்னா் கடலிலிருந்து விண்கலம் மீட்கப்படும். விண்கலம் விண்ணை நோக்கிப் பயணிக்கும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதிலிருந்து வீரா்கள் வெளியேறுவதற்கான சோதனையும் நடத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க: Gaganyaan: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் முதல்படி! சாதிக்குமா இஸ்ரோ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.