ETV Bharat / state

"செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வர் குடும்பம் சிக்கும்" - வழக்கறிஞர் சொல்வது உண்மையா?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில், செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்தால் முதல்வரின் குடும்பம் கூட சிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல். உண்மையில் நடந்தது என்ன? விசாரணையில் யாருக்கு தண்டனை கிடைக்கும்? அதற்கு வழக்கறிஞர்களின் விளக்கம் என்ன? விரிவாக பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 21, 2023, 4:47 PM IST

Updated : Jun 21, 2023, 7:03 PM IST

பண மோசடியில் செந்தில் பாலாஜி: கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 670 காலி பணியிடங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவில் பலர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரிய வழக்கில், பணம் கொடுத்தாக கூறப்படும் நபர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு விட்டதாக உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பண மோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மோசடி வழக்கை உரிய விசாரணை நடத்தாமல் கைவிட முடியாது என்பதால் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து செந்தில் பாலாஜிக்கு சொந்தமாக சென்னை, கரூர், திருவண்ணாமலை மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைபற்றப்பட்டன. ஆவணங்களின் அடிப்படையில் ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி ஏன் கைது?: செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் செந்தில் பாலாஜி கணக்கில் 1.34 கோடி ரூபாயும், அவரது மனைவி கணக்கில் 29.55 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இது வருமான வரிக் கணக்கை விட அதிகமாக இருந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது நடத்துநர்கள், ஓட்டுநர்கள் பணிகளுக்கு தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகத்திடம் பணம் கொடுத்ததாக பல சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வேலைக்காக பெறப்பட்ட பணம், செந்தில் பாலாஜி மற்றும் சண்முகம் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை கிடைக்குமா?: கடந்த 1956ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமலாக்கத்துறை விசாரணை அமைப்பு பதிவு செய்துள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளில் இதுவரை 24 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு கிடைத்துள்ளது. 67 ஆண்டுகளில் 24 வழக்குகளில் மட்டுமே நீதிமன்ற விசாரணை முடிந்து இதுவரை 45 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்னணியில் அமலாக்கத்துறை விசாரணையில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படுவாரா? விடுதலை செய்யப்படுவாரா? வழக்கறிஞர்கள் கூறும் கருத்துக்கள் என்ன? விரிவாக பார்க்கலாம்;

இந்த சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் பாபு முருகவேல் கூறுகையில், “அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், கரூரில் உள்ள உறவினர்களுக்கு கட்டாயம் சிறை தண்டனை கிடைக்கும்.

பாபு முருகவேல்  அதிமுக வழக்கறிஞர்
பாபு முருகவேல் அதிமுக வழக்கறிஞர்

அமலாக்கப்பரிவு சட்டம் 45ன் படி தவறான வழியில் பணம் சம்பாதித்து சொத்து சேர்த்திருந்தாலோ? நேரடியாக ஆதாயம் அடைந்திருந்தாலோ? அல்லது மறைமுகமாக யாரேனும் ஆதாயம் அடைந்திருந்தாலோ? அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும். விசாரணையில் யார் பெயர்களை செந்தில் பாலாஜி கூறினாலும் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும்.

வழக்கு விசாரணையில் எங்கே உண்மை வெளியானால் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து ஏற்படுமோ? என்ற பயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல திமுக அமைச்சர்கள் பதட்டமடைந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

2014ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகே அமலாக்கத்துறை 2023ஆம் ஆண்டில் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் தான் வழக்கு தாமதம் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. குறிக்கீடுகள் ஏதும் இல்லாமல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.

சுப்புரத்தினம்  உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
சுப்புரத்தினம் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

தொடர்ந்து இது குறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுப்புரத்தினம் கூறுகையில், “பணபரிவர்த்தனை தொடர்பான வழக்கில் 2015ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சட்டம் மூலமாக மட்டுமே விசாரிக்க வேண்டிய வழக்கு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக வருமானவரித்துறைக்கும் பின்னர் அமலாக்கத்துறையும் வழக்கை விசாரித்தது.

சர்வதேச அளவிலான பொருளாதார குற்றங்களை விசாரணை செய்யும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த சட்டத்தில் அதிகாரம் இல்லை. சட்டரீதியாக எந்த அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரணை நடத்தினால் செந்தில் பாலாஜி நிச்சயம் விடுதலை செய்யப்படுவார். உச்ச நீதிமன்றமும் லஞ்ச ஒழிப்புத்துறையே தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மாறாக அமலாக்கத்துறை வழக்கை விசாரணை செய்வதால் பாலாஜியின் நிச்சயம் விடுதலை செய்யப்படுவார்.

மேலும், வருமானவரித்துறை சட்டத்தின் படி பணபரிவர்த்தனை வழக்கில், அபராதம் மட்டுமே விதிக்க முடியும். அதனால், அமலாக்கத்துறை மூலம் விசாரணை செய்து செந்தில் பாலாஜிக்கு தண்டனை கிடைக்க மத்திய அரசு மறைமுகமாக முயற்சி செய்கிறது. இது, பாஜக அல்லாத மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு செய்யும் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது” என கருத்து தெரிவித்தார்.

பல அமைப்புகள் விசாரணை மேற்கொண்டாலும், செந்தில் பாலாஜி மீதான குற்றத்தை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ரத்து செய்யவில்லை. அதனால், அமலாக்கத்துறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிப்பதா? விடுதலை செய்வதா? என்பதை நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீதான ED-யின் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

Last Updated : Jun 21, 2023, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.