சென்னை முகப்பேரில் இயங்கிவரும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'பொம்மலாட்ட நிகழ்ச்சி' நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 15 நிமிடங்களில் தாய்மொழி கற்றல், தமிழ் நேசிப்பு, பெண் உரிமை, நெகிழி ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்த்தல், பெரியவர்களை மதித்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்தல் போன்ற தலைப்புகளில் மாணவ, மாணவிகள் பொம்மலாட்ட பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடந்த ஒருவார காலமாக எக்ஸ்னோரா அமைப்பு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விர்சிகா புக் ஆப் ரெக்காடு நிறுவனத்தினர் மாணவ, மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.
இதையும் படிங்க: கோலாகலமாக நடைபெற்ற எருதுவிடும் விழா