ETV Bharat / state

வாகனங்களை வாடகைக்கு விடுவதாக மோசடி: ரூ.30 ஆயிரத்தை சுருட்டியவர் கைது - கரோனா.விவரங்கள்

சென்னை: கிண்டி அருகே இணையதளம் மூலம் வாகனங்களை வாடகைக்கு விடுவதாக கூறி 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை கிண்டியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன். இவர் தனது வேலை நிமித்தமாக நிறுவனத்திலிருந்து சில பொருள்களை வெளியூருக்குக் கொண்டு செல்ல சரக்கு வாகனங்களை வாடகைக்கு தேடி கொண்டிருந்தார்.   அப்போது India Mart என்ற ஆன்லைன் வர்த்தக தளம் மூலம் தேடியதில் மகாபலிபுரத்தில் பூஞ்சேரி என்ற முகவரியைக் கொண்ட விநாயகா & கோ என்ற பெயரில் இருந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இரண்டு சரக்கு வாகனங்கள் வாடகைக்குத் தேவைப்படுவதாக கூறியதாகவும் அதற்கு முன் 30 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் கார்த்திகேயன் செலுத்தியதாகவும் தெரிகிறது.  இந்நிலையில் பணம் செலுத்தியபின் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டதாகவும், அதில், குறிப்பிட்டிருந்த முகவரி போலியானது என்றும் அடையாறு துணை ஆணையர் விக்ரமனிடம் கடந்த மாதம் மே 16 ஆம் தேதி புகார் அளித்தார்.   அந்த புகாரின் பேரில் அடையாறு சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட கொசபேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை அடையாறு கைது செய்தனர்.   விசாரணையில், இவர் ஐடிஐ படித்து முடித்திருப்பதும் ஏற்கனவே திருவல்லிகேனி பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அதை விட்டுவிட்டு போலியான நிறுவனத்தின் பெயரில் ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் சரக்கு வாகனங்களை வாடகைக்கு விடுவதாக கூறி முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.  மேலும், கைதான ஜெயக்குமார் இதேபோல் வேறு யாரையும் ஏமாற்றியுள்ளாரா என்பது தொடர்பாகவும் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கிண்டி காவல் நிலைய குற்றபிரிவினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By

Published : Jun 10, 2021, 4:35 PM IST

சென்னை கிண்டி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன். இவர் வேலை நிமித்தமாக சில பொருள்களை வெளியூருக்கு கொண்டு செல்ல சரக்கு வாகனங்களை வாடகைக்கு தேடி கொண்டிருந்தார்.

அப்போது India Mart என்ற ஆன்லைன் வர்த்தக தளம் மூலம் மகாபலிபுரத்தில் பூஞ்சேரி என்ற முகவரியைக் கொண்ட விநாயகா & கோ என்ற பெயரில் இருந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இரண்டு சரக்கு வாகனங்கள் வாடகைக்கு தேவைப்படுவதாக கூறியதாகவும் அதற்கு முன் 30 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் கார்த்திகேயன் செலுத்தியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், பணம் செலுத்தியபின் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டதாகவும், அதில், குறிப்பிடப்பட்டிருந்த முகவரி போலியானது என்றும் அடையாறு துணை ஆணையர் விக்ரமனிடம் கடந்த மாதம் மே 16 ஆம் தேதி புகார் அளித்தார்.

இதுதொடர்பாக அடையாறு சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட கொசபேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், இவர் ஐடிஐ படித்து முடித்திருப்பதும் ஏற்கனவே திருவல்லிகேனியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அதை விட்டுவிட்டு போலியான நிறுவனத்தின் பெயரில் ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் சரக்கு வாகனங்களை வாடகைக்கு விடுவதாக கூறி முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், கைதான ஜெயக்குமார் இதேபோல் வேறு யாரையும் ஏமாற்றியுள்ளாரா என்பது தொடர்பாகவும் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.