சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் சென்னை, திருப்பூர், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், தஞ்சை, கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி ஆகிய 11 நகரங்களில் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொட்டித் தீர்த்த மழையால் தியாகராய நகர் ஸ்தம்பித்தது. சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்றது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன, இதை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
இந்த ஆணையம் தமிழக முழுவதும் நேரடியாக சென்று ஆய்வு செய்தது. இதன் அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் அக்குழுவினர் இன்று 200 பக்கங்கள் கொண்ட அறிக்கை அளித்தனர். இதில் தமிழக முழுவதும் நடைபெற்று வரும் பணிகளில் தொய்வு, முறைகேடு, யாருக்கெல்லாம் தொடர்பு, எங்கெல்லாம் இணைப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை என்பது குறித்து முதலமைச்சரின் விரிவாக எடுத்துரைத்தார்.
முக்கியமாக டெண்டர் முறைகேடு குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகள் அமெரிக்க ஏலகூடத்தில் கண்டுபிடிப்பு