இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில்,
உபரி ஆசிரியர்களால் தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டுவரும் நிதி இழப்பினை தவிர்த்திடும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அரசு நிதி உதவிபெறும் சிறுபான்மை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.
அதன்படி, அரசால் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் பணியிடங்களை, பணிநிரவல் அடிப்படையில் மட்டுமே முதன்மைக் கல்வி அலுவலர்கள் நிரப்பிக்கொள்ள வேண்டும். மேலும், ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளியில், பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும்.
குறிப்பாக, இப்பணியிடங்களை ஏற்கனவே மற்ற பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை கொண்டு மட்டுமே நிரப்பிக்கொள்ள வேண்டும், எனவே உபரி ஆசிரியர்களைத் தவிர புதிய ஆசிரியர்களை பணிநியமனம் செய்யக் கூடாது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.