ETV Bharat / state

சென்னை அண்ணாசாலை அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புதிய சிலை - மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை அண்ணாசாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புதிய சிலை நிறுவ சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Etv Bharatஅண்ணா சாலை அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புதிய சிலை

author img

By

Published : Aug 30, 2022, 6:26 PM IST

சென்னை: சென்னை அண்ணா சாலை அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புதிய சிலை அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்க மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மாநகராட்சியில் புதிதாக சிலை அமைக்கப்படவுள்ளது.

சைதாப்பேட்டை தொகுதி பஜார் சாலை மற்றும் அண்ணா சாலை சந்திப்பில் முழு உருவச்சிலை வைக்க முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தடையில்லா சான்றிதழ்கோரி சென்னை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் , இன்று (ஆகஸ்ட் 30) நடந்த சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டத்தில் கருணாநிதியின் முழு உருவச்சிலை நிறுவ தடையில்லா சான்று வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் ஏற்கெனவே கருணாநிதிக்கு சிலை உள்ள நிலையில் மீண்டும் சைதாப்பேட்டையில் அண்ணா சாலை அருகே புதிய முழு உருவச்சிலை வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டரீதியான அனுமதி மற்றும் சிலை வடிவமைப்புப்பணிகள் நிறைவுபெற்றபின்னர் செப்டம்பர் மாதத்தின் இறுதியில், கருணாநிதியின் முழு உருவச்சிலை திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கருணாநிதிக்கு புதிதாக சிலை திறக்க அனுமதித்ததற்குப் பாராட்டுகள். அதேபோல
கருணாநிதிக்கு விருப்ப இடமான வள்ளுவர் கோட்டத்திலும் கருணாநிதியின் சிலையினை அமைக்க வேண்டும் என்றும்; கருணாநிதியின் பெயரில் நூலகங்கள் உருவாக்க வேண்டும் என‌ விசிக கவுன்சிலர் கோபிநாத் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:கருணாநிதிக்கு சிலை வைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.