ETV Bharat / state

தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டு கொலை - ஒருவருக்கு வலைவீச்சு! - chennai latest crime news

சென்னை: மதுரவாயல் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai
chennai
author img

By

Published : Dec 16, 2019, 9:34 AM IST

சென்னை மதுரவாயல் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் முரளி(24), அரவிந்த், சுப்பிரமணி, சிம்சன் நான்கு பேரும் கடந்த ஒரு மாதமாக தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் முரளியின் பணப்பை காணவில்லை எனத் தெரிகிறது. அதில் ரூ.1500 ரூபாய் பணம், ஏ.டி.எம். கார்டு இருந்துள்ளது.

இதனால் முரளி தன்னுடன் தங்கியுள்ள சிம்சன் எடுத்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், அவரிடம் கேட்க இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிம்சன், முரளி குடிபோதையில் இருந்தபோது திரும்பவும் பணப்பை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சிம்சன், முரளி தூங்கும்போது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக சுப்பிரமணி, அரவிந்த் இருவரிடமும் சிம்சன் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குடிபோதையிலிருந்தவரை கத்தியால் குத்தியதில் உயிரிழப்பு: மர்மநபருக்கு வலைவீச்சு!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 15.12.19

மதுரவாயலில் கூலித் தொழிலாளி தூங்கும்பொழுது கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவத்தில் இருவரிடம் தீவிர விசாரணை...

சென்னை மதுரவாயல் ஐயப்பா நகர் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் முரளி. இவருக்கு வயது 24 கடந்த ஒரு மாத காலமாக மேற்கண்ட விலாசத்தில் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார்.
அரவிந் மற்றும் சுப்பிரமணி, சிம்சன் ஆகியோர் தங்கி வேலை செய்து வருகிறார்கள். முரளி என்பவருடைய மணிபர்ஸ் காணவில்லை என்றும் அதில் 1500 ரூபாய் மட்டும் ஏடிஎம்களில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சந்தேகத்தின்பேரில் சிம்சன் எடுத்திருக்கலாம் என்று கேட்டதற்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று இரவு சிம்சன் மற்றும் முரளி இருவரும் குடிபோதையில் இருந்ததாகவும் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு முரளி தூங்கும்போது சிப்சன் கல்லை தூக்கி தலையில் போட்டு கொன்றுள்ளார். இக்கொலை தொடர்பாக சுப்பிரமணி மற்றும் அரவிந்த் இருவரிடமும் தப்பியோடிய சிம்சன் குறித்து தீவிர விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்..

tn_che_02_man_murdered_two_persons_arrested_enquiry_is_on_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.