ETV Bharat / state

சென்னையில் முறையற்ற உறவை பிரித்த மகன்.. தாயின் காதலன் செய்த கொடூர கொலை! - chennai illegal affair murder

சென்னையில் முறையற்ற உறவில் இருந்த பெண் தனது மகனின் பேச்சைக் கேட்டு கணவருடன் சென்றதால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் பெண்ணின் மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 11, 2023, 12:26 PM IST

சென்னை: விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன் (38) பிளம்பரான இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி, இரு மகன்கள் உள்ளனர். தனலட்சுமி புளியந்தோப்பில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான இளஞ்செழியன் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டதால், தனலட்சுமி தான் பணிபுரியும் நிறுவனத்தில் கார்த்திக் (42) என்பவருடன் நட்பு பாராட்டியுள்ளார். கார்த்திக், தனலட்சுமிக்கு ஆறுதல் வார்த்தை கூறி கணவர் இளஞ்செழியனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க உதவி புரிந்துள்ளார்.

நாளடைவில் தனலட்சுமிக்கும், கார்த்திக்கும் இடையே இருந்த பழக்கம் திருமணத்தை தாண்டிய உறவாக மாறி இருவரும் கடந்த 5 வருடங்களாக வேளச்சேரியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளஞ்செழியனின் மனைவி தனலட்சுமி, கார்த்திக்கிடம் இருந்து பிரிந்து குடும்பத்துடன் விருகம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் காதலி தனலட்சுமி அவரது கணவருடன் சென்றதால் ஆத்திரமடைந்த கார்த்திக், கடந்த 7ஆம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள இளஞ்செழியன் வீட்டிற்கு சென்று காதலி தனலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது இளஞ்செழியனின் மகனுக்கும், கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவன் மதன்குமாரின் வயிறு மற்றும் கையில் குத்திவிட்டு தப்பியோடி உள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மதன்குமாரை அருகிலிருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வந்தனர்.

இதற்கிடையே இளஞ்செழியன் வீட்டருகே தான் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது கார்த்திக்கை போலீசார் மடக்கி கைது செய்தனர். பின்னர் கார்த்தியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 5 வருடத்திற்கு பிறகு போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய தந்தை இளஞ்செழியனோடு சேர்ந்து வாழுமாறு தாய் தனலட்சுமியை அவரது மகன் மதன்குமார் மனதை மாற்றி அழைத்து சென்றதாகவும், இதனால் தன்னிடம் இருந்து காதலி தனலட்சுமி பிரிந்து செல்ல சிறுவன் மதன்குமாரே காரணம் என ஆத்திரமடைந்து மதன்குமாரை கத்தியால் குத்தியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மதன்குமார் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கில் சிறையில் உள்ள கார்த்திக் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோபியில் ரூ.2.8 கோடி கொள்ளை: 12 மணி நேரத்தில் பணத்தை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்த போலீசார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.