சமூக வலைதளத்தில் பாஸ்கர் என்பவர், எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் மகன் என தெரிவித்துக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீதித்துறை ஒரு கழிவறை என்றும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரை அவதூறாகப் பேசியும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ரவி ஜெயபால் என்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகாரளித்தார்.
அதனடிப்படையில் கடந்த 10ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, சைபர் கிரைம் பிரிவு, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து குற்றச்சாட்டு உண்மையானதால் அவர்கள் பாஸ்கரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தைகள் முன்னே தாய் வெட்டிக் கொலை - தஞ்சையில் பரபரப்பு