ETV Bharat / state

பிரசவ வலியால் துடித்த பெண்... அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிரங்கிய மலேசிய விமானம் - சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் துருக்கி நாட்டிலிருந்து மலேசியா சென்ற விமானம் மருத்துவத் தேவைக்காக அவசரமாக தரையிறங்கியது.

Etv Bharat சென்னை விமான நிலையத்தில் தரையிரங்கிய மலேசிய விமானம்

author img

By

Published : Aug 25, 2022, 8:42 PM IST

சென்னை: துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து, துருக்கிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ரக (B77W) TK 60 என்ற பயணிகள் விமானம் இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு இன்று அதிகாலை 3:20 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 326 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

இந்த விமானம் இன்று மதியம் சென்னை வான்வழி வழியாக கடந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண், பிரசவ வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து விமான ஓட்டுநர், உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு, மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, அவர்கள் அனுமதியுடன், இந்த விமானம் இன்று மதியம் 1:50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, அந்த பெண்ணை பரிசோதித்த போது, அந்த பெண்ணுக்கு குறை பிரசவம் ஏற்பட்டு, குழந்தை இறந்த நிலையில் பிறந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகள், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளோடு தொடர்பு கொண்டனர். அந்த பெண்ணுக்கும் அவருடன் வந்த ஒருவருக்கும் மட்டும் அவசரகால மருத்துவ விசா அளித்தனர்.

அந்தப் பெண்ணையும் அவருக்கு உதவி செய்யக்கூடிய ஒருவரையும் விமானத்திலிருந்து இறக்கி, சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த பெண்ணுக்கு இறந்த நிலையில் பிறந்த சிசுவின் உடலை விமானத்தில் இருந்து கீழே இறக்க அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

இதையடுத்து அவசரகால மருத்துவ விசா கொடுக்கப்பட்ட இரண்டு பேரை தவிர மீதி 324 பயணிகள் மற்றும் அந்த பிறந்து இறந்த சிசுவின் உடலுடன் துருக்கீஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து மீண்டும் மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டது.

இதையும் படிங்க: சாதிய பாகுபாடு குறித்து பேசிய தமிழ்த்துறை தலைவர் அனுராதா சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.