ETV Bharat / state

IFS scam: ஐஎஃப்எஸ் நிறுவன மோசடி வழக்கில் முக்கிய தரகர் கைது!

author img

By

Published : Apr 9, 2023, 1:17 PM IST

அதிக வட்டி தருவதாக கூறி 6,000 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் முக்கிய தரகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி செய்த விவகாரத்தில் ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் முக்கிய தரகர் கைது

சென்னை: LNS நிறுவனத்தைத் தொடங்கி ஐ.எஃப்.எஸ் என்ற பெயரில் வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 25 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி கவர்ச்சியாக விளம்பரம் செய்துள்ளனர். இந்த விளம்பரத்தை நம்பி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

மக்களின் பல கோடி ரூபாய் பணத்தை வசூலித்த இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மூடப்பட்டது. 84,000 நபர்களிடம் இருந்து முதலீடு பெற்று ஏமாற்றியதில், LNS, IFS மற்றும் 5 துணை நிறுவனங்களிலிருந்து மொத்தம் 19 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, இதில் மூன்று பேரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். சுமார் 6000 கோடி ரூபாய் மக்களிடம் மோசடி செய்து உள்ளனர்.

குற்றவாளிகளுக்குத் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை செய்து ரூபாய் 1.12 கோடியும், ரூபாய் 34 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 16 கார்கள், குற்றவாளிகளுக்குச் சொந்தமான 49 அசையா சொத்துகள் போன்றவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடத்தக்க வகையில் 6000 கோடி ரூபாய் மக்களிடம் மோசடி செய்துள்ளனர். இந்த மோசடி விவகாரத்தில் முக்கிய தரகரான ஹரிஹரன் என்பவரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹரிஹரன் முக்கிய இயக்குநர்களுக்கு அடுத்த படியாக இருந்து தரகராகச் செயல்பட்டு ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மக்களிடம் வசூல் செய்தப் பணத்தை சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையினரும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில் விருகம் பாக்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கி இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வந்த ஹரிஹரனிடம் இரண்டு தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையினர் விசாரணையைத் துவக்கியுள்ளனர். இந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரிகரன் எவ்வளவு பேரிடம் பணத்தை வசூல் செய்தார், அந்த பணத்தைச் சட்டவிரோதமாக எங்கெல்லாம் பதுக்கி வைத்துள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய தரகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ஐ.எஃப்.எஸ்(IFS) நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று உள்ளதால் அவர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Bandi Sanjay Released : வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் பாஜக தலைவர் ஜாமீனில் விடுதலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.