ETV Bharat / state

என் பேச்சையாவது நேரலை செய்யுங்கள்! சபாநாயகருக்கும் ஈபிஎஸுக்கும் இடையே நீண்ட விவாதம் - Speaker Appavu in the Legislative Assembly

சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பேசுவதை ஒளிபரப்புவதைப் போல, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதற்கு, நேரமில்லா நேரத்தில் என்ன பேசுவோம் என்பதை அனைத்து கட்சித்தலைவர்களும் முன்கூட்டியே தெரிவிக்க உறுதியளித்தால் நேரலை செய்ய முடிவு செய்யப்படும் என்று பதிலளித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 18, 2023, 6:32 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் 'எதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேசுவதையும், நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திப் பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, 'நேரமில்லா நேரத்தில், என்ன பேசுவோம் என்பதை அனைத்து கட்சித்தலைவர்களும் முன்கூட்டியே தெரிவிக்க உறுதியளித்தால் நேரலை செய்ய முடிவு செய்யப்படும்' என்றார். இவை குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே நீண்ட நேர விவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20, 21ஆம் தேதிகள் முறையே பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து நடந்து வரும் துறை ரீதியான மானியக் கோரிக்கைக்கான விவாதத்தின் ஒருபகுதியாக இன்று (ஏப்.18) நடந்த விவாதத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினார்.

அப்போது அவரது பேச்சுக்கு இடையே, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடையிடையே பதிலளிக்காமல் நான் பேசி முடித்தவுடன் பதிலளிக்கவும் எனக் கறாராக கூறினார். பின்னர் அவரது கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அதை கேட்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலுரை அளிக்கும்போது, இருக்கைகளில் இல்லாமல் போவது வருத்தமாக உள்ளது' என்றார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'ஜனநாயக முறைப்படி சட்டமன்றத்தில் தேவைப்பட்டால் இருப்போம். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் வெளிநடப்பு செய்வோம். உங்கள் பதிலுரையை கேட்கத் தயார். எங்கள் கோரிக்கையை நீங்கள் ஏற்க வேண்டும். நாங்கள் கேட்கும் கேள்வி என்ன? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் பேசுவதை ஒளிபரப்புவதைப் போல, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும் நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய பேரவைத்தலைவர் அப்பாவு, 'இந்த அரசு பொறுப்பேற்று, சட்டப்பேரவை நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ஒரு முயற்சி எடுத்து இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்குச் சென்று வந்து கேள்வி பதில் மட்டும் முதல் கட்டமாக நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது. அதன்பின், 110 விதிகள் நிகழ்ச்சி நிரலில் இருக்கக்கூடிய அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்தவைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கேள்வி நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) என்ன பேச போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. எதிர்க்கட்சித் தலைவர் இதைத் தான் பேசுவார் என்பது அல்ல, முன் வரிசையில் இருக்கக்கூடிய பல கட்சித் தலைவர்கள் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து அனைவருக்கும் உரிமை உண்டு. அதன் அடிப்படையில் நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை’ என்று பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், 'கடந்த 10 ஆண்டுகாலம் என்ன நடந்தது என்பதை பதிவாக வைத்துள்ளதாகவும், கேள்வி நேரமில்லாத நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அனுமதி இருப்பதாகவும், முழுமையாக பேசி முடித்துவிட்டு மாலையில் கொடுக்கும்போது முழுமையாக முதலமைச்சர் பதில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ’எதிர்க்கட்சித் தலைவர் பேசியது ஒரு கேள்வி மட்டுமே இருக்கும், கடந்த 10 ஆண்டுகள் காலமும் என்ன நடந்தது எங்காவது இருக்கின்றதா? என்று பார்த்தேன். இந்த ஆட்சி நிரலில் உள்ளவையும் நேரலை நிகழ்வுகளாகவும், ஒன்றன்பின் ஒன்றாக நேரலை கொண்டு வருவதற்கு இந்த அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இதில் எந்த பாரபட்சமும் இல்லாமல் தான் நடைபெறுகிறது. முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்தால் கூட கேள்வி நேரமில்லாத நேரத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை. அனைத்து கட்சித் தலைவர்களும் முடிவு எடுத்தால் மட்டுமே அதில் முடிவெடுக்க முடியும். இதில், எதிர்க்கட்சி தொடங்கி எந்த வித்தியாசமும் இல்லாமல் ஜனநாயகத்துடன் அனைத்தும் சட்டத்துடன் நடைபெறுகிறது’ என ஊர்ஜிதமாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 'நாங்கள் பேசுவதையே நீங்கள் ஒளிபரப்புவதில்லை. மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசுவதைக் கூட ஒளிபரப்பு செய்யமாட்றீங்களே ஏன்? எதிர்க்கட்சி உறுப்பினர் என்ன பேசுகிறார்? என்பதைக் காட்டினால் தானே மக்களுக்கு புரியும்’ என்றார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, 'மானியக்கோரிக்கை விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும் நேரலை ஒளிபரப்பு செய்வதில்லை, விளக்கத்தை ஏற்று பதிலுரையின் போது பங்கேற்க வேண்டும்' என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'பேசுவது அனைத்தும் அவைக்குறிப்பில் உள்ளபோது, அவைக்குறிப்பில் உள்ளவற்றை ஏன் ஒளிபரப்புவதில்லை. பிரதான எதிர்க்கட்சித் தலைவர் நான் பேசுவதையாச்சும் நேரலையாக ஒளிபரப்பலாமே?' என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, 'இதில் நிறைய விசயங்கள் இருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் கோரிய வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்' என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, 'எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதையாவது நேரலையாக ஒளிபரப்பலாம். இன்றைக்கு அதற்கான முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, 'எதிர்க்கட்சித்தலைவருக்கு மட்டும் அந்த வாய்ப்பை வழங்க முடியாது. முன்வரிசையில் கட்சித்தலைவர்கள் அமர்ந்துள்ளதாகவும், இவை குறித்து பேசி முடிவெடுக்கப்படும்' எனக் கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: "போராளி இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம்" - முதலமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.