ETV Bharat / state

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற காவலர் கால் துண்டான கொடூரம்!

பணியிடமாற்றத்தை பரிசீலனை செய்யக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று வந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கேசவன் என்பவரின் இடதுகால் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது துரதிஷ்டவசமாக துண்டாகியது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 7, 2023, 11:53 AM IST

சென்னை: தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கேசவன்(55). இவர் ராயபுரம் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இவரை கடந்த மாதம் போக்குவரத்து பிரிவில் இருந்து சட்ட ஒழுங்கு பிரிவுக்கு பணிமாற்றம் செய்ததால் சென்னை காவல் ஆணையரை சந்தித்து தனது உடல் நலம் குறித்து தெரிவித்து பணிமாறுதல் ஆணையை ரத்து செய்யவேண்டி கடந்த 3 நாட்களாக ஆணையர் அலுவலகம் வந்து சென்றுள்ளார்.

மேலும், கேசவன் பணிமாறுதல் செய்யப்பட்டதால் அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரை வேறொருவருக்கு மாற்றி கொடுக்கும்படி ஆய்வாளர் கௌசல்யா கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சல் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கேசவன் இன்று (பிப்.1) தண்டையார்பேட்டையில் இருந்து பேசின்பிரிட்ஜ்க்கு ரயிலில் வந்துள்ளார். பின்னர் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் ரயில் அவர் மீது மோதியதில் அவரது இடது கால் துண்டானது. இதனைப் பார்த்த சகபயணிகள் உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த பேசின்பிரிட்ஜ் போலீசார் கேசவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் இவ்விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 1993 ஆம் ஆண்டு பேட்ச் காவலரான கேசவனுக்கு, கடந்த 1997 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த இமாம் அலி என்கவுண்டர் வழக்கில் இவரது உடம்பில் பல குண்டுகள் பாய்ந்து சிகிச்சை பெற்றதும், அதில் ஒரு குண்டு இன்னும் உடம்பில் இருப்பதால் அதற்காக மருத்துவ சிகிச்சைப் பெற்று வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கேசவனை கடந்த மாதம் சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்ததால் காவல் ஆணையரை சந்தித்து பணிமாறுதலை ரத்து செய்ய வேண்டி கடந்த 3 நாட்களாக ஆணையர் அலுவலகம் வந்து செல்வதும் தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காரில் 100 கிலோ கஞ்சா கடத்தல்: கேரள இளைஞர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.