சென்னை: தேனாம்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, ஜூலை 3ஆம் தேதி இரவு, கோவளம் பகுதியிலுள்ள ரிசார்டுக்குச் தனது நண்பர் ஸ்வீட்டோஸ் (20) என்பவருடன் சென்றுள்ளார்.
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஸ்வீட்டோஸ் சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் குடிக்கக் கொடுத்ததாகவும்; அதனைக் குடித்து சுயநினைவின்றித் தள்ளாடிய சிறுமியை, ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 4) காலை சிறுமி சுயநினைவிற்கு வந்தபோது, அவர் ஒரு அறையில் தனித்து இருப்பதையும்; அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார் என்பதையும் உணர்ந்துள்ளார்.

போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு
இதையடுத்து வீடு திரும்பிய சிறுமி தனக்கு நடந்தது குறித்து, தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட சிறுமியின் தாய், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஸ்வீட்டோஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாமா மகன்களிடம் போன் பேசிய சிறுமிகளை கொடூரமாகத் தாக்கிய குடும்பத்தார்!