ETV Bharat / state

திமுக பிரமுகர் வீட்டில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்..! - fire

ஆவடி அடுத்த திருநின்றவூரில் திமுக பிரமுகர் எம்.ஜி.பாஸ்கர் வீட்டில் மின்கசிவு காரணமாக திடீர் தீ பிடித்து எரிந்ததால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

திமுக பிரமுகர் வீட்டில் தீ விபத்து:பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!

author img

By

Published : Jun 4, 2022, 7:08 PM IST

சென்னை: திருநின்றவூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் எம்.ஜி.பாஸ்கர். இவர், திமுக பிரமுகர். இவரது வீட்டில் முதல் மாடியில் இருந்து திடீரென கரும்புகையானது வெளியேறி இருக்கிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எம்.ஜி.பாஸ்கர் அவரது மகள் இந்துமதி குடும்பத்தினர் முதல் மாடியில் வசித்து வருகின்றனர்.

திமுக பிரமுகர் வீட்டில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்..!

வீட்டின் பூஜை அறையில் திடீரென்று மின் கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்தது. இதனால் உடனே வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இது குறித்து உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாய்பேட்டை, திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிவதால் தீயை கட்டுப்படுத்த நீண்ட நேரமாக போராடி வருகின்றனர்.

இந்தத் தீ விபத்தில் சமையல் எரிவாயு வெடித்து சிதறியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென எரிந்து வருவதால் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள்.

வீட்டில் இருந்தவர்கள் முன்னதாகவே வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் யாருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட வில்லை. இந்த தீ விபத்தால் வீட்டிலிருந்த பிரிட்ஜ் ,ஏசி ,வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து நாசமாகின.

இந்தத் தீ விபத்து குறித்து திருநின்றவூர் போலீசார் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தேனியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.