சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு (ஏப். 24) புறப்படத் தயாராக இருந்தது. பயணிகளும் வேகமாக ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர் மாதுரி என்பவர் நடைமேடைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
ரயில் புறப்படும்போது ஆண் பயணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் ரயில் பெட்டிக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதனைக் கண்ட பெண் காவலர் மாதுரி, துரிதமாக செயல்பட்டு ஆண் பயணியின் உயிரைக் காப்பாற்றினார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்நிலையில், துரிதமாக செயல்பட்டு ஆண் பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர் மாதுரியை ரயில்வே பாதுகாப்பு படை உயர் அலுவலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாவகசமாக நகைப் பெட்டியை திருடி செல்லும் திருடர்கள்...