ETV Bharat / state

போக்குவரத்து விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகித்த பிரபல பைக் ரேஸர்

author img

By

Published : Oct 3, 2022, 12:10 PM IST

பிரபல யூடியூப் பைக் ரேஸர் கோட்லா அலெக்ஸா, உயர் நீதிமன்ற உத்தரவின்படி போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

போக்குவரத்து விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகித்த பிரபல பைக் ரேஸர்
போக்குவரத்து விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகித்த பிரபல பைக் ரேஸர்

சென்னை அண்ணா சாலையில் கடந்த 8ஆம் தேதி இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் (19) மற்றும் முகமது சைபான்(19) ஆகிய இருவரை பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினோய் என்பது தெரிய வந்தது. மேலும் பைக் சாகசங்களில் ஈடுபடும் இவரை 14,000 பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதும் தெரிய வந்தது. அதேபோல் பைக் சாகசத்திற்கு பயன்படுத்திய பைக் இவரது நண்பருடையது என தெரிய வந்ததையடுத்து, பைக் எண்ணை வைத்து ஹைதராபாத்தில் இருந்த வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் மேற்கொண்ட கோட்லா அலெக்ஸ் பினோய்

இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே தலைமறைவான பினோய், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, “திங்கள்கிழமை மட்டும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிக்னலில் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரசுரங்கள் வழங்க வேண்டும்.

செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் 12 மணி வரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற வேண்டும். அதேபோல மூன்று வாரங்களுக்கு பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்” என்ற நூதன தண்டனையுடன் கூடிய முன் ஜாமீனை வழங்கி உத்தரவிட்டார்.

போக்குவரத்து விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகித்த பைக் ரேஸர் கோட்லா அலெக்ஸ் பினோய்

இந்நிலையில் இன்று (அக் 3) காலை 9.30 மணி முதல் பினோய், அண்ணாசாலை தேனாம்பேட்டை சிக்னலில் சாலை பாதுகாப்பை மதிக்க வேண்டும், பைக் சாகசங்கள் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பலகையை வைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதேபோல அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த பிரசுரங்களையும் வழங்கினார். முன்னதாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஒரு வாரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விபத்து பிரிவில் பணியாற்ற வேண்டும் என்ற நூதன தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "வன்முறை என்னை விரும்புகிறது, என்னால் தவிர்க்க முடியாது'...TTF வாசனின் புதிய வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.