ETV Bharat / state

தூங்கிக் கொண்டிருந்த குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போதை ஆசாமி - மிளகாய் பொடி தூவி திருடன் பிடிப்பு

சென்னையில் நள்ளிரவில் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போதை ஆசாமியை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 24, 2023, 8:08 AM IST

சென்னை: சென்னையில் நள்ளிரவில் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போதை ஆசாமியை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், பல குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் இளைஞர் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் வசித்து வரும் தம்பதிக்கு, 11 மாத பெண் குழந்தை மற்றும் 6 வயதில் ஒரு பெண் குழந்தை என இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய முன்தினம் (மே 22) நள்ளிரவு 1 மணியளவில் குடும்பத்தினர் 4 பேரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால், குழந்தையின் தாய் கண் விழித்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது குழந்தையிடம் தவறாக நடந்து கொள்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து குழந்தையின் தாய் கூச்சலிட்டுள்ளார். இவ்வாறு குழந்தையின் தாயின் கூச்சல் சத்தம் கேட்ட அந்த மர்ம நபர், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

ஆனால், அதற்குள் பொதுமக்களின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து, பிடிபட்ட நபருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது, அந்த நபர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற அவரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கயிற்றால் அவரது கைகளை கட்டி காவல் துறையினர் வரும் வரை பொதுமக்கள் சிறை பிடித்து வைத்திருந்தனர்.

இதனையடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சித்த அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் என்பதும், அவர் அப்பகுதியில் எந்த நேரமும் கஞ்சா போதையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இதே நபர் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரின் 5 வயது ஆண் குழந்தையிடம் கையில் பணம் கொடுத்து ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளதாக அந்தக் குழந்தையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது போன்ற கஞ்சா போதையில் கொடூர செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது குழந்தைகளின் பெற்றோர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மெரினாவில் கத்திமுனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. நண்பர்களின் மண்டை உடைப்பு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.