சென்னை: கடந்த ஒரு மாதமாக பெரும்பாலான இடங்களில் மாநகராட்சி, மெட்ரோ ரயில், மின் துறை சார்பில் சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக இந்த சாலைகளில் அகலம் குறுகி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் சாலை பாதிக்கப்பட்டும் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் பின்புறம், ‘சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும்’ என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஆட்டோவின் பின்புறம், "மாநகராட்சி அதிகாரிகளே! கோடம்பாக்கம் மேம்பாலத்தில் 2, 3 மெகா சைஸ் பள்ளங்கள் உள்ளன. வாகன ஓட்டுனநர்களுக்கு உயிர் பலி ஏற்படுவதற்கு முன்னே சரி செய்திடுக" என்று எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் அமல்படுத்த உத்தரவு!