சென்னை : மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்கள் சிலர் ரயில் நிலையத்தில் இருந்த போது கடந்த 20ம் தேதி தகராறு ஏற்பட்டு அடித்துக் கொண்டனர். இதனையடுத்து கொளத்துமேடு பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் வாகனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது விஜி என்பவவர் தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக அவர் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சஞ்சய், மணிகண்டன், அருண், அன்புசெல்வன், அஜய் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
இதில் சஞ்சய் என்பவரின் தந்தை குமார் தன்னுடைய மகனை விடுவிக்குமாறு காவல் நிலையம் சென்று முறையிட்டுள்ளனர் அப்போது மீனம்பாக்கம் போலீசார், குமாரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த குமார் காவல் நிலையம் அருகே மாநகர பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்து முன் விழ பாய்ந்தார், பக்கவாட்டில் மோதி கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து மீனம்பாக்கம் உதவி ஆணையர் புகழ்வேந்தன் கூறுகையில், தாக்குதல் சம்பவத்தில் குமாரின் மகன் ஈடுபட்டதற்கு சிசிடிவி ஆதாரம் உள்ளதாக கூறினோம். ஆனால் அதனை ஏற்க மறுத்து பேருந்து முன் அவர் பாய்ந்ததாக விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க:கோவை கார் வெடி விபத்து...மேலும் ஒருவர் கைது