ETV Bharat / state

அங்கக வேளாண்மை கொள்கையை உருவாக்க தலைமைச் செயலாளர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் - தலைமைச் செயலாளர் இறையன்பு

தமிழ்நாட்டிற்கான அங்கக வேளாண்மை கொள்கையை உருவாக்குதல் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு, தலைமையில் தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அங்கக வேளாண்மை கொள்கையை உருவாக்க தலைமைச் செயலாளர் தலைமையில்  கலந்தாய்வுக் கூட்டம்

author img

By

Published : Sep 16, 2022, 10:27 AM IST

சென்னை: தலைமைச் செயலாளர் தலைமையிலான கலந்தாய்வு கூட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை உத்திகளை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவுப் பொருள் பாதுகாப்பு, விவசாயம், பல்லுயிர் பாதுகாப்பு, மண் வளப் பாதுகாப்பு ஆகியவற்றின் தேவை மற்றும் இதன் மூலம் அதிகரித்து வரும் அங்கக வேளாண்மை உற்பத்தி பொருட்களின் புதிய சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் தற்சார்பினை நிலைநிறுத்திடத் தேவையான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையை உருவாக்குவதற்கான அவசியம் குறித்தும், தமிழ்நாட்டில் படிப்படியாக அங்கக வேளாண்மையை விரிவுபடுத்துவது குறித்தும், அதற்காக, அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகள் குறித்தும் விரிவாக இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேற்கண்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் நாட்டின் பிற மாநிலங்களில் குறிப்பாக, சிக்கிம், ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் அங்கக வேளாண்மைக் கொள்கை குறித்தும் அவற்றின் நடைமுறை சாத்தியக் கூறுகள், நடைமுறைப்படுத்துவதிலுள்ள இடர்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலை, புவியியல் அமைப்புக்கு உகந்த வகையில் அங்கக வேளாண்மைக் கொள்கை அமையவேண்டும். விவசாயிகள் தாமாக முன்வந்து அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதே இக்கொள்கையின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

பாரம்பரிய வேளாண் உத்திகளை ஆராய்ந்து, அவற்றின் மேன்மைத் தன்மையினை உறுதி செய்து, அதனை ஆவணப்படுத்தி விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பரவலாக்குவதன் முக்கியத்துவத்தை தலைமைச் செயலாளர் வலியுறுத்தினார். அங்கக வேளாண் விளைபொருட்களை சேமித்தல், பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதலுக்கான வழிமுறைகள், சந்தை வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க ஏற்ற பகுதிகளையும், பயிர்களையும் அடையாளம் கண்டு, தொகுப்பு அடிப்படையில் படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், இதற்குத் தேவையான இடுபொருட்கள் அருகாமையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், ஆலோசனை வழங்கப்பட்டது. குறிப்பாக மானாவாரிப் பகுதிகள், கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேற்கண்ட கூட்டத்தில் வழங்கப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய வரைவு அங்கக வேளாண்மைக் கொள்கை உருவாக்கப்பட்டு அடுத்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், சிறப்புச் செயலாளர், துறைத் தலைவர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், அங்கக வேளாண் பிரதிநிதிகள், அங்கக வேளாண்மை சார்ந்த அரசு சாரா நிறுவனத்தினர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வேளச்சேரி - கைவேலி வழித்தடத்தில் ஈரடுக்கு மேம்பாலம்...முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.