ETV Bharat / state

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எஸ்.பி தலைமையில் குழு அமைப்பு - ராதாகிருஷ்ணன் - Radhakrishnan

தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக 4 எஸ்.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு நான்கு எஸ்.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது

author img

By

Published : Jul 23, 2022, 3:14 PM IST

சென்னை: இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு நான்கு எஸ்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் இருப்பில் உள்ளது. இதற்கான சேமிப்பு கிடங்கும் போதுமானதாக உள்ளது.

தமிழ்நாட்டில் 9 லட்சம் மெட்ரிக் அரிசி வீணாகி உள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தவறானவை. 92,500 கிலோ அரிசி மட்டுமே வீணாகியது. வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நெல் மற்றும் அரிசிகளை பாதுகாக்க நபார்ட் மற்றும் தனியார் பங்களிப்புடன் புதிய கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளை சூப்பர் மார்க்கெட் போல் நவீனப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் அரிசியை இடைத்தரகர் மூலம் விற்பனை செய்ய வேண்டாம்" என்றார்.

இதையும் படிங்க: ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய நடராஜர் சிலை மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.