ETV Bharat / state

கலாசேத்ரா கல்லூரி விவகாரம் - பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு! - கலாசேத்ரா கல்லூரி பாலியல் தொல்லை

கலாசேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 31, 2023, 10:58 PM IST

சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாசேத்ரா கல்லூரியில், பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து கலாசேத்ராவில் நடைபெறும் பாலியல் தொந்தரவு பிரச்னை குறித்து விசாரணை நடத்துமாறு டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக கூறப்பட்ட மாணவி, தன் மீது அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ( மார்ச் 29 ) தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கலாசேத்ரா கல்லூரிக்குச் சென்று மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்திச் சென்றனர். இந்த நிலையில் பாலியல் தொந்தரவு கொடுக்கும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று காலை ( மார்ச் 30 ) திடீரென சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரியின் வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் கல்லூரியின் இயக்குநர், ஆர்டிஓ, காவல் துறையினர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து தொடர்ச்சியாக 30 மணி நேரத்திற்கும் மேலாக மாணவிகள் போராடி வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் இயக்குநர் மற்றும் தலைமைப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய கலாசார அமைச்சகத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக மாணவிகள் புகார் அனுப்பினர்.

பின்னர் தமிழ்நாடு மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கலாசேத்ரா வழக்கை கையில் எடுத்து, விசாரணை நடத்திச் சென்றது. இருந்த போதிலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகள் தரப்பில் காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் கலாசேத்ரா பவுண்டேஷனில் பயின்று, பாதியில் கல்லூரியை விட்டு நின்றதாக முன்னாள் மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். குறிப்பாக கல்லூரியில் தனக்கு நடந்த கசப்பான சம்பவங்களை வெளியில் கொண்டுவர நினைப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கலாசேத்ரா கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்ற பிறகு, தனக்கு நேரிட்ட விமர்சனங்கள் காரணமாக, அதே கல்லூரியில் முதுகலைப் படிப்பு படிக்க விரும்பவில்லை எனவும்; ஆனால் குடும்ப வற்புறுத்தலின் காரணமாக முதுகலைப் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனது வகுப்பின் பேராசிரியராக இருந்தவர் தனக்கு கொடுத்த தொல்லையின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு பாதியிலேயே படிப்பை நிறுத்திக்கொள்ள முடிவு எடுத்ததாகவும், அதன் பிறகு கல்லூரி வளாகத்தில் அமர்ந்திருந்தபோது அந்த ஆசிரியர் தவறான நோக்கில் தன்னை அழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடன நிகழ்ச்சியின்போது முக்கிய கதாபாத்திரத்தில் தான் ஆடியதாகவும், ஆனால் பேராசிரியர் தன்னை மாற்றி, வேறு ஒருவரை நியமனம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் முன்னாள் கல்லூரியின் இயக்குநர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகப் பதிவு வெளியிட்டதால், தனக்கு நடந்த சம்பவத்தை வெளிக்கொண்டுவர இதுவே தக்க சமயம் என நினைத்து புகார் அளித்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கல்லூரியில் படிப்பது பலரின் கனவாக இருக்கின்ற சூழலில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பேராசிரியர் செயலின் காரணமாக பறிபோனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்கள் கழித்து நீதி கிடைத்துள்ளதாகவும், இந்தப் புகார் தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் தான் நேரில் வரத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக அடையார் அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, உதவி பேராசிரியர் ஒருவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கலாஷேத்திராவில் பாலியல் புகார் - உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் ஆணையத்தலைவி உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.