சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை பிராட்வே பகுதியில் இருந்து, மூலக்கடை நோக்கிச்சென்ற 64c என்ற மாநகரப்பேருந்து, வியாசர்பாடி பகுதியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்றது.
அப்போது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரின் காரணமாக பேருந்து செல்ல முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த போக்குவரத்துப்போலீசார், மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த பேருந்தை கட்டியிழுத்து வெளியே கொண்டு வந்தனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். வருடந்தோறும் மழைக்காலங்களில் கணேசபுரம் சுரங்கப்பாதையில் இதுபோன்று மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம்சாட்டும் இப்பகுதி மக்கள், இதுபோன்ற பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் பள்ளிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்