சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதுமாக கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கென பிரத்யேக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது அங்கு 200க்கும் மேற்பட்ட கரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று உறுதியான 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், கடந்த 3ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த 71 வயது முதியவர் மூச்சு திணறல், இருதய நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
கரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த முதியவர், திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதும், ஏற்கனவே நுரையீரல், இருதய நோய் பிரச்சினை இருந்ததால் சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...நாடெங்கிலும் ஒற்றுமை தீப ஒளியை ஏற்றிய மக்கள்!