சென்னை: ஹெராயின் போதைப்பொருளை 90 கேப்சில்களில் அடைத்த கேப்சூல்களை விழுங்கி, வயிற்றுக்குள் வைத்து கொண்டு வந்த வெளிநாட்டுப் பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை.
சார்ஜாவில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த கல்ப் ஏர்வேஸ் விமானப் பயணிகளை நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக சென்னை வந்த பெண் பயணி மீது ஏற்பட்ட சந்தேகத்தின்படி அவரிடம் சோதனை செய்யப்பட்டது.
அப்போது அந்தப் பெண் பயணி, தான் இங்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருப்பதாகக் கூறினார். ஆனால், அதற்கான சான்றிதழ்கள் எதுவும் இல்லை. இதனால் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில் அவருடைய உடமைகளை முழுமையாக சோதனை இட்டனர். உடமைகளில் எதுவும் இல்லை.
ஆனாலும், சந்தேகம் தீராமல் அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர். அப்போது, அவருடைய வயிற்றுக்குள் ஏராளமான கேப்சல்கள் விழுங்கி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண் பயணியை வெளியில் விடாமல் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அந்த பெண் பயணியை இரண்டு நாட்களாக மருத்துவமனையில் வைத்து இனிமா கொடுத்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் உள்ள கேப்சல்களை இன்று (டிச.16) முழுமையாக மொத்தம் 90 கேப்சல்களை வெளியில் எடுத்தனர்.
அந்த கேப்சல்களை உடைத்து பார்த்தபோது, 902 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் என்பதை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 6.31 கோடி ஆகும். இதையடுத்து, அந்த பெண் பயணியை கைது செய்த சுங்க அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண் பயணி எந்த நாட்டை சேர்ந்தவர்? என்ற விவரம் சுங்க அதிகாரிகள் இதுவரை தெரியப்படுத்தவில்லை. ஆனால், இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்த பெண் பயணி என்பதும் மட்டும் தெரிய வருகிறது
இதையும் படிங்க: TIDCO: முதலீடுகளை ஈர்க்க தீவிரம்... அரசின் நோக்கம் என்ன?