ETV Bharat / state

லேடி வெலிங்டன் பள்ளியின் 90 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் இடிப்பு

லேடி வெலிங்டன் பள்ளியில் 1930ஆம் ஆண்டு கட்டப்பட்ட நான்கு கட்டடங்களில் இரண்டு இடிக்கப்படும் என்றும், இரண்டு மறுசீரமைப்பு செய்யப்படும் எனவும் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

லேடி வெலிங்டன் பள்ளியில் பழமையான 2 கட்டடம் இடிப்பு

author img

By

Published : Dec 20, 2021, 5:05 PM IST

சென்னை: நெல்லையில் பள்ளிக்கூட கழிவறை சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, சென்னை திருவல்லிக்கேணியில் லேடி வெலிங்டன் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் லால் பகதூர் உள்ளிட்டோர் ஆய்வுமேற்கொண்டனர்.

லேடி வெலிங்டன் பள்ளி
லேடி வெலிங்டன் பள்ளி

இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் லால் பகதூர், "ஆயிரம் 448 அரசுப் பள்ளிகள் சென்னையில் உள்ளது. அதனை ஆய்வுசெய்ய 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறை, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.

சரிசெய்ய முடியும் என்ற நிலையில் உள்ள கட்டடங்கள் சரிசெய்யப்படும். பழுதடைந்த கட்டடங்கள் உடனே இடிக்கப்பட்டு அரசு செலவில் புதிய கட்டடங்கள் அமைக்கப்படும். சுவர் விரிசல், தண்ணீர்க் கசிவு, வகுப்பறை மேல் கூரை உள்ளிட்டவை ஆய்வுசெய்யப்பட்டும்.

லேடி வெலிங்டன் பள்ளி
லேடி வெலிங்டன் பள்ளி

லேடி வெலிங்டன் பள்ளியில் 1930ஆம் ஆண்டு கட்டப்பட்ட நான்கு கட்டடங்களில் இரண்டு இடிக்கப்படும். மேலும், இரண்டு கட்டடங்கள் மறுசீரமைப்புச் செய்யப்படும். மூன்று நாள்களில் சென்னையில் உள்ள பள்ளிகளின் தரத்தை ஆய்வுசெய்ய வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: ஏழை மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டும் விஜய்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.