சென்னை: 2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரிவரை அவதூறு பேச்சு, செய்தி வெளியீடுகளுக்காக தினசரி, வார பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர் உள்ளிட்டோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
அவற்றில் தி இந்து நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், எக்கனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், தினமலர் நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ஆனந்த விகடன் வார இதழின் ஆசிரியர் மீது 9 வழக்குகளும், ஜுனியர் விகடன் இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும், நக்கீரன் இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், முரசொலி நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்குகளும், தினகரன் நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன.
மேலும் புதிய தலைமுறை, நியூஸ் 7, சத்யம், கேப்டன், என்டிடிவி, டைம்ஸ் நவ், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளை திரும்ப பெறுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிமெண்ட் விலை உயர்வு விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவு