ETV Bharat / state

தமிழ்நாட்டில் 80 வயதிற்கும் மேற்பட்ட முதிய வாக்காளர்கள் இத்தனை லட்சமா...!

தமிழ்நாட்டில் 80 வயதிற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் 9 லட்சத்து 22 ஆயிரத்து 116 பேர் உள்ளனர் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

electors
electors
author img

By

Published : Nov 2, 2020, 3:34 PM IST

Updated : Nov 2, 2020, 4:34 PM IST

இதுகுறித்து சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், மாற்றுதல், பெயர் நீக்குதல் போன்ற பணிகளும் நடைபெறுகின்றன. பிப்ரவரி 14ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு 9 லட்சத்து 48 ஆயிரத்து 512 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

படிவம் 6ஐ பயன்படுத்தி 2 லட்சத்து 44 ஆயிரத்து 808 நபர்கள் புதிதாக பெயர் சேர்ப்பதற்கும், படிவம் 6ஏ வின் மூலம் வெளிநாட்டில் வாழ்பவர்கள் 93 பேர் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், பெயர் நீக்குதல், திருத்தம் செய்தல், சட்டப்பேரவை தொகுதிக்கு முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு 9 லட்சத்து 48 ஆயிரத்து 612 வாக்காளர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றும் முதியவர்கள்

தமிழ்நாட்டில் 80 வயதிற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் 9 லட்சத்து 22 ஆயிரத்து 116 பேர் உள்ளனர். இவர்களில் சென்னை மாவட்டத்தில் 76 ஆயிரத்து 618 முதியவர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 ஆயிரத்து 329 முதியவர்களும், சேலம் மாவட்டத்தில் 46 ஆயிரத்து 898 முதியவர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 659 முதியவர்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 969 முதியவர்களும் அதிக அளவில் உள்ளனர்.

மேலும், மாவட்ட வாரியாக உள்ள முதியவர்கள் பட்டியலையும் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

Last Updated : Nov 2, 2020, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.