சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது.
அந்தவகையில் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கிவருகிறது. மக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.
இந்தநிலையில், இன்று (செப்.28) புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை கொண்டு வரப்பட்டன.
இதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு - உள்ளாட்சி தேர்தல் இட பங்கீடு குறித்து பேச்சு?