ETV Bharat / state

அம்பத்தூரில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு..லாவகமாக பிடித்த தீயணைப்புத்துறை

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சாலையில் சுற்றித்திரிந்த 15 கிலோ எடை கொண்ட 9 அடி மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்து வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 5:57 PM IST

சென்னை: அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சாலையில் பிடிக்கப்பட்ட 15 கிலோ எடை கொண்ட 9 அடி நீளம் மலைப்பாம்பு இன்று பிடிபட்டது. இதனை பிடித்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய மீட்புப் படை வீரர்கள், கிண்டி வனச்சரக அலுவலகத்தில் மலைப்பாம்பை ஒப்படைத்தனர்.

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சாலை வழியாக கொரட்டூர் செல்லக்கூடிய தொழிற்பேட்டை பகுதியில் சாலையோரம் இன்று (டிச.9) அதிகாலை 4 மணிக்கு சுமார் 9 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் ரோந்து பணியின்போது கண்டனர்.

பின்னர் உடனடியாக, தொழிற்பேட்டை தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு மீட்பு நிலையத்தில் பணியிலிருந்த சிறப்பு நிலைய அலுவலர் புஷ்பாகரன் மற்றும் தீயணைப்பு வீரர் அருள் பிரகாசம் மற்றும் 6 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தீயணைப்பு மீட்பு நிலையத்துக்கு எடுத்து வந்து சென்னை புறநகர மாவட்ட அலுவலர் தென்னரசு அவர்கள் உத்தரவின்படி, கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்ல அம்பத்தூர் பகுதி ஸ்நேக் கேட்ச்சர் கணேசன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

தற்பொழுத மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் நடுவே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே முதலை பிடிபட்டது. அதற்கு பிறகு, இரண்டாவது முறையாக அம்பத்தூரில் 9 அடி நீள மலைப்பாம்பு குடியிருப்பு பகுதியில் நுழைவதற்குள் பத்திரமாக பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேளச்சேரியில் தொடரும் மீட்புப் பணி.. மேலும் ஒருவர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.