ETV Bharat / state

மாண்டஸ் புயல் தாக்கம் எதிரொலி: சென்னை வந்த 9 விமானங்கள் ஹைதராபாத்துக்கு மாற்றம் - to Bangalore and Hyderabad in

மாண்டஸ் புயல் (Mandous Cyclone) தாக்கம் காரணமாக சென்னையில் தரையிறங்க வந்த 9 விமானங்கள் பெங்களூர், ஹைதராபாத் ஆகிய விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 10, 2022, 8:03 AM IST

சென்னை: மாண்டஸ் புயல் (Mandous Cyclone) சென்னை அருகே கரையைக் கடந்தபோது நேற்று சென்னை விமான நிலையம் வந்த 6 விமானங்கள் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. இந்நிலையில் மேலும், அப்புயலின் தாக்கம் காரணமாக இன்று (டிச.10) சென்னை வந்த 3 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

அதன்படி, திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.

அதன் பின்பு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், இந்த 3 விமானங்களும், ஹைதராபாத்திற்கு திரும்பிவிடப்பட்டன. மேலும் பல விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் தாமதமாகத் தரையிறங்கின.

இதையும் படிங்க: வேகமாக கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.