ETV Bharat / state

8 வழிச்சாலை திட்டம்: ஆண்ட கட்சியாக மாறுமா ஆளுங்கட்சி

சேலம் செல்வதற்கு ஆகும் ஐந்து மணி நேரத்தில் சென்னையிலிருந்து 56 கி.மீ தொலைவில் இருக்கும் செங்கல்பட்டுக்கு செல்லும் நேரம் மட்டும் இரண்டு மணி நேரம் ஆகிறது. எனவே சென்னை - செங்கல்பட்டுக்கு இடையேயான சாலையை விரிவுப்படுத்தினாலே சென்னை - சேலத்திற்கு இடையேயான பயண நேரம் குறையும் என்கின்றனர் ஒரு தரப்பினர்.

ஃபச்
ட்ச்ஃப
author img

By

Published : Mar 4, 2021, 12:44 PM IST

Updated : Mar 4, 2021, 2:55 PM IST

“நிலத்திற்கு பதில் நீங்கள் கொடுக்கும் பணத்தை வைத்து காலம் முழுக்க சாப்பிட முடியுமா, எடப்பாடி பழனிசாமி அவர் வீட்டுக்கு சீக்கிரம் போறதுக்காக இந்த ரோட்ட கேக்குறாரு” மத்திய அரசு அறிவித்திருக்கும் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகளின் குரல் இது.

சென்னையிலிருந்து சேலத்திற்கு விரைவாக செல்லலாம் என்று கூறி எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற காத்திருக்கிறது ஆளும் அரசு. ஆனால், இது பொதுநலத்திற்கா இல்லை சுயநலத்திற்கா என்ற கேள்வி எழுகிறது.

தனியார் நிறுவனத்திற்காகவும், ராணுவ தளவாடங்களை சீக்கிரம் எடுத்து செல்வதற்காகவும்தான் பல்லாயிரம் மரங்களை அழித்து இத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறார்கள் என்கின்றனர் நிலத்தை பறிகொடுத்திருக்கும் விவசாயிகள்.

டச்ஃப்

தற்போது இருக்கும் ஆளுங்கட்சியோ திட்டம் தொடர்பான தெளிவான விளக்கங்களை கொடுக்கவில்லை. அடுத்த மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தே தீருவோம் என்று கூறும் திமுகவோ, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட உறுதியளித்துள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிச்சயம் அதற்கான விளைவுகளை எந்த ஆட்சி அமைந்தாலும் சந்திக்கும் என்பது காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குரலை கேட்கும்போது அறியமுடிகிறது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சென்னையிலிருந்து சேலத்தை அடையலாம். இதன் தொலைவு 361 கி.மீ ஆகும். அதேபோல், சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர் வழியாகவும் சேலத்தை அடையலாம். இதன் தொலைவு 350 கி.மீ ஆகும்.

ஆனால் எட்டு வழிச்சாலையில் சென்றால் தற்போது ஐந்து மணி நேரமாக இருக்கும் பயண நேரம் மூன்று மணி நேரமாக குறையும் என்கிறார்கள் திட்டத்தின் ஆதரவாளர்கள். பத்தாயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்படவிருக்கும் இந்த சாலை, சேலம் மாவட்டம் அரியனூரில் தொடங்கி சென்னை அருகே வண்டலூரில் முடிவடைகிறது.

சேலம் மாவட்டத்தில் 36.3 கி.மீ, தர்மபுரியில் 56 கி.மீ, கிருஷ்ணகிரியில் இரண்டு கி.மீ, திருவண்ணாமலையில் 123 கி.மீ, காஞ்சிபுரத்தில் 59 கி.மீ என மொத்தம் 277 கிலோமீட்டர் இந்த சாலை நீள்கிறது. இந்தச் சாலைக்கு சேலம் முதல் அரூர்வரை NH 179A என்றும், அரூர் முதல் சென்னைவரை NH 179B என்றும் எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எட்டு வழிச்சாலையின் நீளம்
எட்டு வழிச்சாலை கடக்கும் தூரம்

காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி, செங்கம். தர்மபுரியில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மஞ்சவாடி கணவாயை இந்த சாலை அடைகிறது. பின்னர், சேலத்தில் அயோத்தியாப்பட்டணம் வழியாக வரகம்பாடி, எருமாபாளையம் வழியே சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை நிறைவு பெறுகிறது.

இந்தத் திட்டத்தால், 8,000 ஏக்கர் விளைநிலங்கள், பல்லாயிரக் கணக்கான ஏழை விவசாய குடும்பத்தினர், 10,000 கிணறுகள், நூறுக்கும் மேற்பட்ட நீர் நிலைகள், கஞ்ச மலை, ஜருகு மலை, கவுதி மலை, கல்வராயன் மலை உள்ளிட்ட எட்டு மலைகள் அழிய இருக்கின்றன.

இந்த மலைகளில் பல வகையான உயிர்கள் வாழ்கின்றன. ஏற்கனவே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சேலம், தர்மபுரி, திருவண்ணாமலையில் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டால் மழை அளவு 40 விழுக்காடுக்கும் மேல் குறைந்துள்ளதாக தெரியவந்திருக்கிறது. இந்தச் சூழலில் மேலும் வனங்களை அழித்தல் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்கின்றனர் வன ஆர்வலர்கள்.

ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் ஏறத்தாழ 20,000க்கும் மேற்பட்டோர் தங்களது விவசாயத்தை இழக்கும் நிலை உருவாகும். இதனால் உணவு உற்பத்தி குறைந்து விலைவாசி அளவு அதிகரிக்கக்கூடும் என அஞ்சுகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

அதுமட்டுமின்றி, நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என்கின்றனர் அவர்கள். ஏற்கனவே விவசாயத்தின் நிலை கேள்விக்குறியாக இருக்கும் சூழலில் இந்த சாலை அதனை அடையாளம் தெரியாமல் அழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு தற்போது கொடுக்கும் சுங்கக் கட்டணமே அதிகமாக இருக்கும் நிலையில், எட்டு வழிச்சாலை அமைந்தால் அதற்கான சுங்கக் கட்டணம் மேலும் உயர வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே கடன் சுமையில் சிக்கியிருக்கும் தமிழ்நாடு அரசு தனது பேருந்துகள் இந்த சாலையில் செல்வதற்கு மேற்கொண்டு சுங்கக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். உயரும் சுங்கக் கட்டணத்தால் நடுத்தர மக்களோ, ஏழை மக்களோ இந்த சாலையில் பயணமே செய்ய முடியாத நிலை உருவாகும்.

சேலம் செல்வதற்கு ஆகும் ஐந்து மணி நேரத்தில் சென்னையிலிருந்து 56 கி.மீ தொலைவில் இருக்கும் செங்கல்பட்டுக்கு செல்லும் நேரம் மட்டும் இரண்டு மணி நேரம் ஆகிறது. எனவே சென்னை - செங்கல்பட்டுக்கு இடையேயான சாலையை விரிவுப்படுத்தினாலே சென்னை - சேலத்திற்கு இடையேயான பயண நேரம் குறையும் என்கின்றனர் ஒரு தரப்பினர்.

எட்டு வழிச்சாலையால் அழியப்போகும் இயற்கை வளங்கள்

இருப்பினும், பசுமை அழிப்பின் அடையாளமாக மாறியிருக்கும் இந்தத் திட்டத்திற்கான பூர்வாங்க பணியாக விவசாய விளைநிலங்கள் வழியாக செல்லும் சாலைக்கு சர்வே எடுக்கும் பணி நடைபெற்றது. இவ்வாறு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல் துறை பாதுகாப்புடன் அந்தப் பணிகள் நடைபெற்றன. இப்பணிக்காக கையகப்படுத்தப்படும் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலமாகவும் வீடுகளாகவும் இருப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நார்த்தாம்பூண்டி விவசாயி
நார்த்தாம்பூண்டி விவசாயி

“இந்த எட்டு வழிச்சாலை தனியார் நிறுவனத்திற்காக அமைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுதி, வெடியப்பன் மலையில் உள்ள இரும்புத்தாது, பாக்சைட் உள்ளிட்ட கனிமங்களை வெட்டி எடுத்து பெரிய வாகனங்கள் மூலம் விரைவாக துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வதற்காகவே இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த அரசுகள் தனியார் நிறுவனத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. விவசாயிகளைப் பற்றி துளிக்கூட கவலைப்படவில்லை” என்ற குற்றச்சாட்டை நார்த்தாம்பூண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் முன்வைக்கின்றனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை கட்சி சார்பற்ற விவசாய சங்க பொதுச்செயலாளர் சிவா, “இந்தத் திட்டத்தால் பிரதமருக்கோ, அமைச்சர்களுக்கோ ஒரு செண்ட் நிலம்கூட போகாது. நேரடியாக என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா” என்று கேள்வி எழுப்பினார்.

திருவண்ணாமலை கட்சி சார்பற்ற விவசாய சங்க பொதுச்செயலாளர் சிவா

திட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுர மாவட்ட தலைவர் நேருவிடம் பேசுகையில், “இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கோ பாஜகவுக்கோ இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் இத்திட்டத்தை வேண்டாம் என்று சொல்லும் கட்சிகளுக்குத்தான் வாக்களிப்போம்” என்று கூறினார்.

மேலும், நிலம் ஐந்து பவுண்டேஷனின் தலைவர் சண்முகவேல், “இந்தத் திட்டத்திற்கான எதிர்க்குரல் என்பது வாழ்வியலை பிரதிபலிக்கிறது. சேலத்திலிருந்து சென்னைக்கு ஏற்கனவே மூன்று வழிகள் இருக்கின்றன. சேலத்திலிருந்து சென்னைக்கு செல்ல ஏகப்பட்ட போக்குவரத்து வசதிகள் இருக்கும் நிலையில் புதிதாக இந்தத் திட்டத்தை கொண்டுவந்து மக்களை கடும் வேதனைக்கு ஆளாக்குகின்றனர்” என்றார்.

நிலம் ஐந்து பவுண்டேஷன் தலைவர் சண்முகவேல்

பசுமைவழிச் சாலை என்று திட்டத்திற்கு பெயர் வைத்துவிட்டு பூமியின் பசுமையை பாதுகாக்கும் மரங்களையும், நிலத்தையும் அழிக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றாத கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்கின்றனர் விவசாயிகள் ஆணித்தரமாக. எனவே இந்தத் தேர்தலில் எட்டு வழிச்சாலை திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. மக்களின் எண்ண ஓட்டத்தை நன்றாக தெரிந்துகொண்டும் எந்த ஆட்சியும் இந்தத் திட்டத்தை இனியும் செயல்படுத்தக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

அதனையும் மீறி செயல்படுத்தினால் அதுவே அந்த ஆட்சியின் கடைசி காலமாக இருக்கலாம். இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வரும் தற்போது இருக்கும் ஆளுங்கட்சி ஆண்ட கட்சியாகலாம்; அதற்கான பதிலை காலம் தன்னுள்ளே மறைத்து வைத்திருக்கிறது.

Last Updated : Mar 4, 2021, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.