தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறையின் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. கரோனா பரவலைத் தடுப்பது, சிகிச்சை அளிப்பது ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து அரசு செயல்படுகிறது.
இந்நிலையில், 8 அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர்களை மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
![மதுரை உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் மாற்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-medical-collage-dean-transfer-script-7204807_17052021142918_1705f_1621241958_278.jpeg)
1. மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக்குழு செயலராகப் பதவி வகிக்கும் சாந்திமலர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி, மருத்துவக்கல்வி இயக்குநரக தேர்வுக்குழு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
![மதுரை உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் மாற்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-medical-collage-dean-transfer-script-7204807_17052021142918_1705f_1621241958_280.jpeg)
3. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பரவலைத் தடுக்க அனைத்துக் கட்சி குழு: தமிழ்நாடு அரசு அதிரடி!