சென்னை சூளையில் ரமேஷ் என்பவரது வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, வேப்பேரி காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் காவல் துறையினர் ரமேஷ் வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடந்து கொண்டிருந்தது தெரியவந்தது
இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்களை அனைவரையும் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் உட்பட 8 பேரையும் காவல்துறையினர் எச்சரித்து காவல்நிலைய ஜாமீனில் அனுப்பினர்.