ETV Bharat / state

ஜொலிக்கும் ஆஸ்கார் 'பொம்மன்'.. சென்னையில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி! - hockey tournament from august 3

சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பின் நடக்கவுள்ள 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியானது, வரும் ஆகஸ்ட் 3ல் தொடங்குகிறது. அவை குறித்து விவரிக்கிறது, இச்செய்தித் தொகுப்பு...

சென்னையில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி

author img

By

Published : Aug 1, 2023, 7:21 PM IST

சென்னை: 16 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டுப் போட்டி சென்னையில் இந்தாண்டு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. மேலும் 25 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் இந்திய - பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் மோதவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாக ஹாக்கி ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தின் புதிய அம்சங்கள்: ரூ.16 கோடி செலவில், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை ஆடுகளம், வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தினர்கள் அமர்வதற்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள், என சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முன்னாள் முதலமைச்சர் கருனாநிதியின் பெயரில் நூற்றாண்டு ஸ்டாண்டை அன்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பொம்மன்: செஸ் ஒலிம்பியாட் 2022 கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்றது. அப்போது குதிரை வடிவத்தில் "தம்பி" என்ற இலச்சினையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது நடக்கவுள்ள 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கு போட்டியின் இலச்சினையாக ‘பொம்மன்’ என்ற யானை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொம்மன் "ஆஸ்கர்' விருது பெற்ற 'எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' ( Elephant whisperers) பட நாயகர் "பொம்மன்" பெயர் மற்றும் யானையின் உருவம் கொண்ட இலச்சினையை உருவாக்கியுள்ளது, தமிழக அரசு.

சர்வதேச வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு: 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி விளையாடுவதற்காக தமிழகத்திற்கு வந்த சர்வதேச வீரர்களுக்கு தமிழக அரசு சார்பாக விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ஹாக்கி போட்டி நடைபெறும் இடமான எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டிக்கெட் ஒன்று - போட்டி மூன்று: சென்னையில் நாள் ஒன்றுக்கு மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை காண நாள் ஒன்றுக்கு 4000 டிக்கெட்டுகள் விற்பனைக்காக உள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 முதல் ரூ.500 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு டிக்கெட் வாங்குபவர்கள் அன்று நடைபெறுகின்ற மூன்று போட்டிகளையும் காணலாம். இந்த டிக்கெட்டுக்களை https://ticketgenine.in (https://in.ticketgenie.in/Tickets/Hero-Asian- Champions-Trophy-2023) என்ற இணையதளம் மூலம் பெறலாம்.

யார் யாருடன் பலப்பரீட்சை:

ஆகஸ்ட் 3 -பிற்பகல் 4 மணி: கொரியா VS ஜப்பான்; மாலை 6.15 மணி: மலேசியா VS பாகிஸ்தான்;இரவு 8.30 மணி: இந்தியா VS சீனா

ஆகஸ்ட் 4- பிற்பகல் 4 மணி: கொரியா VS பாகிஸ்தான்;மாலை 6.15 மணி: சீனா VS மலேசியா;இரவு 8.30 மணி: இந்தியா VS ஜப்பான்

(ஆகஸ்ட் 5 - போட்டிகள் எதுவும் இல்லை)

ஆகஸ்ட் 6- பிற்பகல் 4 மணி: சீனா VS கொரியா; மாலை 6.15 மணி: பாகிஸ்தான் VS ஜப்பான்; இரவு 8.30 மணி: மலேசியா VS இந்தியா

ஆகஸ்ட் 7- பிற்பகல் 4 மணி: ஜப்பான் VS மலேசியா; மாலை 6.15 மணி: பாகிஸ்தான் VS சீனா ; இரவு 8.30 மணி: கொரியா VS இந்தியா

(ஆகஸ்ட் 8 - போட்டிகள் எதுவும் இல்லை)

ஆகஸ்ட் 9- பிற்பகல் 4 மணி: ஜப்பான் VS சீனா; மாலை 6.15 மணி: மலேசியா VS கொரியா;இரவு 8.30 மணி: இந்தியா VS பாகிஸ்தான்

(ஆகஸ்ட் 10 - போட்டிகள் எதுவும் இல்லை)

ஆகஸ்ட் 11- பிற்பகல் 3.30 மணி 5/6வது இடம் – லீக் சுற்றில் 5வது இடம் பிடித்த அணி VS லீக் சுற்றில் 6வது இடம் பிடித்த அணி
மாலை 6 மணி அரையிறுதி 1(SEMI-FINAL1) - லீக் சுற்றில் 2வது இடம் பிடித்த அணி VS லீக் சுற்றில் 3வது இடம் பிடித்த அணி
இரவு 8.30 மணி: அரையிறுதி 2 (SEMI FINAL2 )- லீக் சுற்றில் 1வது இடம் பிடித்த அணி VS லீக் சுற்றில் 4வது இடம் பிடித்த அணி

ஆகஸ்ட் 12- மாலை 6 மணி 3/4வது இடம் – லூசர் SF1 VS லூசர் SF2; இரவு 8.30 மணி: இறுதி(FINAL) - வெற்றியாளர் SF1 VS வெற்றியாளர் SF2

இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்த அணியில் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷ்ண பகதூர் பதக், சுமித், ஜூகராஜ் சிங், ஜர்மன்ப்ரீத் சிங், வருண் குமார், அமித் ரோஹிதாஸ், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்ப்ரீத் சிங், நீலகண்ட ஷர்மா, ஷம்சீர் சிங், அகஷ்தீப் சிங், மந்தீப் சிங், குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹாக்கி பிளேயர் கார்த்தி செல்வம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இவரது ஆட்டத்தைப் பார்க்க தமிழக ஹாக்கி ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

25-ஆண்டுகளுக்குப் பின் இந்தியா Vs பாகிஸ்தான் மோதல்: ஹாக்கி தொடரைப் பொறுத்தவரை இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் பலம் வாய்ந்த அணிகளாக இருந்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியும் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி மழையால் தடைபட்டதால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரு அணிகளுமே தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன.

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் விளையாடும் ஆட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடைசியாக 1998ல் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இதே மைதானத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு விளையாடின. 25 ஆண்டுகளுக்குப் பின் இரு அணிகளும் சென்னையில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ள இந்த ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன் யார்? : இதுவரை இந்தியா 2011, 2016 மற்றும் 2018 ஆகிய வருடங்களும்; பாகிஸ்தான் அணி 2012, 2013 மற்றும் 2018 ஆகிய வருடங்களும் சாம்பியன் பட்டம் வென்று தலா மூன்று முறை வெற்றி பெற்றுள்ளனர். 2018ஆம் ஆண்டு இரு அணிகளுக்கும் கோப்பையானது பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்தத் தொடரின் நடப்பு சாம்பியனாக தென் கொரியா தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழக ஹாக்கி பிரிவுத் தலைவர் சேகர் மனோகரன் கூறியதாவது, "7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. ஆசிய கண்டத்தில் உள்ள தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகள் பங்கேற்கிறது.

இதற்கான சிறப்பான முறையின் நாங்கள் அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம். மேலும் 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு சென்னையில் சர்வதேச போட்டி நடக்கிறது. இதனால் ஹாக்கி ரசிகர்களிடைய பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது" என்றார்.

ஆசியாவில் முதலாவது: மேலும் அவர், " சென்னையில் 2015ஆம் ஆண்டு புனரமைத்தல் பணியில் ட்ர்ஃப் போடப்பட்டது. அதற்குப் பிறகு தற்போது பாரிஸ் நாட்டில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைதானத்தில் பயன்படுத்தப்படவுள்ள டர்ஃப்(hockey pitch/ truf) சர்வதேச தரத்தில் இருப்பது போன்றே இங்கும் ட்ர்ஃப் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆசியாவிலேய முதல் முறையாக இந்தியாவில் அதுவும் சென்னையில் தான் இந்த ட்ர்ஃப் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற ட்ர்ஃப்-க்கு 35,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த நவீன ட்ரஃப்-க்கு 10,000 லிட்டர் தண்ணீர் தான் தேவை. மேலும் இது முழுக்க முழுக்க 80 சதவீதம் கரும்பில் இருந்து தயாரித்தவை. அதனால் சுற்றுச்சுழலுக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி செய்து சர்வதேச வீரர்கள் இதைப் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் இந்தப் போட்டியில் விளையாடும் அனைத்து அணிகளும் 2025 பாரிஸில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்ல ஒரு வழியாக அமையும். இந்திய அணியில் தமிழக வீரர் கார்த்தி செல்வம், மற்றும் மலேசியா அணிக்கு அருள், மற்றும் சுப்பிரமணியன் ஆகிய தமிழ் பயிற்சியாளர்கள் இருப்பது தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு செயலிழந்துவிட்டது... டிபிஜிக்கு சம்மன்.. உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.