கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் பேசிய, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய கால்நடைக் கிளை நிலையங்கள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கால்நடைகளுக்கும் மேல் உள்ள கிராமங்களில், புதிய கால்நடைக் கிளை நிலையங்கள் அமைக்க அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் புதிதாக 75 கிளை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.