சென்னை விமான நிலையத்தின் சா்வதேச முணையத்திலிருந்து 6 விமானங்களில் 743 இந்தியா்கள் பயணித்தனா். அவா்களில் 430 போ் மீட்பு விமானங்களில் இந்தியா திரும்பியவா்கள், 313 இந்தியா்கள் அரசின் சிறப்பு அனுமதிபெற்று வெளிநாடுகளுக்குச் சென்றவா்கள்.
அமெரிக்கா, ஓமன், அபுதாபி, சவுதி அரேபியா நாடுகளில் சிக்கித்தவித்த 430 இந்தியா்கள் 4 சிறப்பு மீட்பு விமானங்களில் இன்று அதிகாலை சென்னை அழைத்து வரப்பட்டனா். அவா்களில் பெரும்பான்மையோர் அந்தந்த நாடுகளிலேயே கரோனா மருத்துவப் பரிசோதனகள் செய்து சான்றிதழ்களுடன் வந்திருந்தனா்.
எனவே அவா்கள் அனைவரின் சான்றிதழ்களை சரிபார்த்து, கைகளில் ரப்பா் ஸ்டாம்பு முத்திரையிட்டு அவரவர் வீடுகளுக்கு தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து மருத்துவ சான்றிதழ்கள் கொண்டு வராதவா்களுக்கு அங்கேயே கரோனா பரிசோதனை நடத்திய மருத்துவக் குழுவினர் பின்பு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்த அனுப்பினா்.
அதைப்போல் சென்னையிலிருந்து இன்று அதிகாலை அபுதாபி, லண்டன் ஆகிய இரண்டு சிறப்பு தனி விமானங்கள் 313 இந்தியா்களுடன் புறப்பட்டுச் சென்றன. இந்த விமானங்களில் வெளிநாடு செல்லும் 313 போ்களில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்கள், வெளிநாட்டுக் குடியுரிமைப்பெற்ற NRI போன்றவா்கள் இருந்தனா்.
இவா்கள் அனைவருக்கும் 72 மணி நேரத்திற்கு முன்பு கரோனா மருத்துவப் பரிசோதணை செய்து, நெகட்டிவ் சான்றிதழ்களுடன் வந்தவா்களை மட்டுமே விமானங்களில் ஏற அனுமதித்தனா்.
இதையும் படிங்க: குன்னூரை பொலிவுப்படுத்தும் கிளீன் குன்னூர் தன்னார்வ குழு!