ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7-pm-top-10-news
7-pm-top-10-news
author img

By

Published : May 18, 2020, 6:57 PM IST

இந்திய எண்ணெய் எரிவாயு டேங்கர் வெடித்து 7 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டம் அஜாங் காவ்ன் அருகே அமைந்துள்ள இந்தியன் ஆயில் கேஸ் டேங்கர் தீப்பிடித்து வெடித்தது. அந்த வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கரோனை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

'புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட விபத்திற்கு காங்கிரஸ் தான் காரணம்' - யோகி ஆதித்யநாத்!

லக்னோ: ஆரையாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட லாரி விபத்திற்கு ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் தான் காரணம் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலையில் பொதுத்தேர்வு!

டெல்லி: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1ஆம் தேதிமுதல் 15ஆம் தேதிவரை நடைபெறும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு - ராஜிவ் சக்சேனாவுக்கு டெல்லி உயர் நீதின்றம் நோட்டீஸ்

டெல்லி : அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், ராஜிவ் சக்சேனாவுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யுமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மனு குறித்து பதிலளிக்குமாறு, சக்சேனாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்!

மும்பை: இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நாள் முடிவின்படி சென்செக்ஸ் 1,069 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி-இன் காட்சி தரம் பழைய நிலைக்கு மாற்றப்பட்டது!

ஒடிடி தளங்களில் மிகவும் பிரபலமான நெட்ஃபிளிக்ஸ் கரோனா காலங்களின் தனது தளத்தின் படகாட்சிகளின் தரத்தை குறைத்திருந்தது. தற்போது அதனை பழைய எச்.டி தரத்தில் பயனர்கள் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா எதிரொலி: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு!

கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது சீசன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

'கோவிட்-19 எங்கிருந்து பரவியது?' - உலக சுகாதார அமைப்பின் விசாரணையை ஆதரித்த இந்தியா!

ஜெனீவா: கோவிட்- 19 எங்கிருந்து பரவியது என்பது குறித்து பக்கச்சார்பற்ற, சுயாதீன விசாரணை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த வரைவுத் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரித்துள்ளன.

10 கோடி தடுப்பூசிகள்: கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர பிரிட்டன் தீவிரம்

லண்டன்: பிரிட்டனில் கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி பரிசோதனையை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்திவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.