ETV Bharat / state

7.5% இட ஒதுக்கீடு: தரவரிசைப் பட்டியல் வெளியீட்டில் குழப்பம் - engineering ranking list

7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்காக சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்தும் தரவரிசைப் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறவில்லை என மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு

author img

By

Published : Sep 15, 2021, 3:32 PM IST

Updated : Sep 15, 2021, 4:46 PM IST

சென்னை: 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று (செப்.15) தொடங்கியது.

இதற்காக விண்ணபித்த 36 ஆயிரம் மாணவர்களின் சான்றிதழ்கள் பள்ளிக் கல்வித்துறையால் சரிபார்க்கப்பட்டு தகுதியான மாணவர்களின் பட்டியல் நேற்று (செப்.14) வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 15 ஆயிரத்து 660 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர், தாங்கள் அரசுப் பள்ளியில் படித்தும் தரவரிசைப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். விண்ணப்ப படிவம், தேவையான சான்றிதழ்கள் என அனைத்தும் சரியாக பதிவேற்றம் செய்தும் இடம் கிடைக்கவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து மாணவி முருகலட்சுமி, "நான் 155 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளேன். இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னணி கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தரவரிசைப் பட்டியலில் பெயர் வரவில்லை. இது தொடர்பாக அலுவலர்களிடம் தெரிவித்துள்ளேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 7.5% இட ஒதுக்கீடு - அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

Last Updated : Sep 15, 2021, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.