ETV Bharat / state

உள் ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநருக்கு வழிகாட்டுங்கள் - அமித்ஷாவிற்கு டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: இளங்கலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்க, மத்திய உள்துறை அமைச்சர் வழிகாட்ட வேண்டும் எனக்கூறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு கடிதம் எழுதியுள்ளார்.

7.5 percent horizontal reservation issue dmk mp d.r.balu writes letter to Home Minister Amit shah

author img

By

Published : Oct 27, 2020, 2:42 PM IST

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள், மருத்துவக் கல்வி பெறுவதற்கும், பெருமை மிக்க இந்த நாட்டின் எதிர்கால மருத்துவர்களாக வருவதற்கான கனவை நனவாக்குவதற்கும், தடையாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் திமுக வலியுறுத்தி வருவதை, உள்துறை அமைச்சராகிய தாங்கள் நன்கு அறிவீர்கள்.

2017-2018ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு, அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை ஆராய்வதற்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலையரசன் உள்ளிட்ட மூத்த வல்லுநர்கள் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. அந்தக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஹோமியோபதி படிப்புகளுக்கான தகுதித்தேர்வாக கருதப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்று மாநில அரசு முடிவெடுத்தது.

இந்த முடிவின் அடிப்படையில், நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020, கடந்த மாதம் 15ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இம்மாதம் 16ஆம் தேதி நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், திமுக தலைவர் ஸ்டாலின், அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டிலேயே இட ஒதுக்கீட்டின் பலனை அடையும்படியாக மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுநருக்கு கடந்த 21ஆம் தேதி கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்த ஆளுநர், இடஒதுக்கீட்டு விவகாரத்தில் முடிவெடுக்க மேலும் மூன்றிலிருந்து நான்கு வாரகால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அது தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்புக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது என்பதால், கடந்த 24ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். தற்போது மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு சேர்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்டன. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் இன்னமும் கால தாமதம் செய்வது, மருத்துவக் கல்வியைக் கற்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குவதோடு, இந்தக் கல்வியாண்டை பொறுத்தவரையில் அந்த மசோதாவின் நோக்கம் பயனற்றதாகிவிடும்.

மருத்துவத்துறையை தங்கள் தொழிலாக அமைத்துக் கொள்ளும் அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை இந்த ஆண்டிலேயே நிறைவேற்றும்படியாக மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஹோமியோபதி இளங்கலைப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020க்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழ்நாடு ஆளுநருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.