ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9AM - Today top news in Tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

6th June Top 10 News of ETV Bharat Tamilnadu

author img

By

Published : Jun 6, 2020, 8:42 AM IST

1.முதலமைச்சருக்கு தலைமை செயலக சங்கம் கோரிக்கை!

ஊரடங்கு முடியும் வரை 50 விழுக்காட்டுக்கு பதிலாக 33 விழுக்காடு பணியாளர்களை மட்டுமே பணிக்குவர அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

2.வெட்டுக்கிளி படையெடுப்பை வேரறுக்கும் புதிய கண்டுபிடிப்பு!

விவசாய்த்தை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகள் கூட்டத்தை அழிக்க புதிய கருவியைக் கண்டுபிடித்து சேலம் பொறியியல் மாணவர் அசத்தியுள்ளார்.

3.கோவிட்-19 ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்வளித்துள்ள தெலங்கானா அரசு!

கோவிட்-19 கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் ஜூன் 8 முதல் மீண்டும் திறக்கப்படும் என, தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

4.கர்நாடகாவில் கை கோர்க்கும் பங்காளிகள்? நகம் கடிக்கும் பாஜக!

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக யூகங்கள் வெளியாகிவருகிறது.

5.எல்லை விவகாரம் : இந்திய சீன ராணுவ துணை தளபதிகள் இன்று பேச்சுவார்த்தை

லடாக்கில் நிலவிவரும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்திய சீனப் படைகளைச் சேர்ந்த ராணுவ துணை தளபதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

6.இந்தியா - நேபாளம் பூசல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் - சி. உதயபாஸ்கர்

இந்தியா, நேபாளத்துக்கு இடையே உள்ள தனித்துவம் வாய்ந்த உறவு குறித்தும், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பூசல் குறித்தும் முன்னாள் ராணுவத் தளபதி சி. உதயபாஸ்கர் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ..

7.கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்த சீனா: விமானங்களை அனுமதித்த அமெரிக்கா!

அமெரிக்காவில் சீன விமானங்களைக் குறைந்த அளவில் அனுமதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

8.உலகமே விழித்திரு - முகத்தில் கருப்பு மை பூசிய தமன்னா!

அமெரிக்காவில் நடந்த நிறவெறிக் கொலைக்கு எதிராக நடிகை தமன்னா, எல்லா உயிர்களும் நமக்கு முக்கியம். உலகமே விழித்திரு, இரக்க குணத்துடன் இருப்போம் என பதிவிட்டுள்ளார்.

9.நயன்தாராவுக்கு பாட்டு பாடிய எல்ஆர்.ஈஸ்வரி!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் பிரபல பாடகி எல்ஆர்.ஈஸ்வரி அம்மன் பாட்டு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10.'ஐபிஎல் சீசன் சிறந்த தொடக்கமாக அமையும்'-தீபக் சஹர்

கரோனா வைரஸின் தாக்கம் குறைந்ததும் ஐபிஎல் தொடர் நடைபெற்றால் கிரிக்கெட் வீரர்களுக்கு அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.