தாம்பரம் இந்திய விமான படைத் தளத்தில், பயிற்சி முடித்த 692 பேர் விமான படையில் இணையும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 26) நடைபெற்றது. அனைவரும் 64 வாரங்கள் பயிற்சியை நிறைவுசெய்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு விமான படை கமாண்டிங் அலுவலர் விபுல் சிங் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்திய விமான படையின் மேன்மைக்கும், தொழில்சார் முன்னேற்றத்துக்கும் புதிதாக இணைந்தவர்கள் பாடுபட வேண்டும். விமான படைக்கு உண்டான மாண்பை அனைத்து நேரங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார். மேலும், விமான படை நிகழ்ச்சியின்போது வீரர்கள் செய்த சாகசங்களையும் பாராட்டினார்.
இதையும் படிங்க: மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி தேவை!